ஆணியன் சமோசா

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

ஆணியன் சமோசா-இது மினி சமோசா.ஸ்பிரிங் ரோல் (மாவு) (அ) ஸ்பிரிங் ரோல் சீட் கொண்டு தயாரிக்கப்படுகிறது.இந்த மினி சமோசா ஹைதராபாத்தில் பிரபலமானது.இது பெரும்பாலும் டீ யுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இந்த சமோசா இராணி டீகடை/இராணி கேப் கடைகளில் விற்கப்படுவதால் இராணி சமோசா என்று அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

80 நிமிடங்கள்
12 நபருக்கு
  1. 1/2 கப்கோதுமை மாவு
  2. 1/2 கப்மைதா
  3. 1/8 தேக்கரண்டிசர்க்கரை
  4. 1/2 தேக்கரண்டிஉப்பு
  5. 2 தேக்கரண்டிநெய்
  6. 1/2 கப்தண்ணீர்
  7. ஆணியன் பில்லிங்
  8. 2பொடியாக நறுக்கிய வெங்காயம்
  9. 1/2 கப்திக்கான அவல்
  10. 1 தேக்கரண்டிமிளகாய்த்தூள்
  11. 1/4 தேக்கரண்டிகரம் மசலா
  12. 1/2 தேக்கரண்டிசாட் மசாலா
  13. 1/2 தேக்கரண்டிஉப்பு
  14. 2பச்சை மிளகாய்
  15. 1 மேஜைக்கரண்டிகொத்தமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

80 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பவுலில்,கோதுமை மாவு,மைதா,சர்க்கரை,உப்பு,நெய் சேர்த்து கலக்கவும்.

  2. 2

    பிசைந்து உருண்டையாக்கவும்.

  3. 3

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து (மிருதுவாக) 20-30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  4. 4

    மாவினை சமமாக உருண்டைகளாக (வட்டம்/ஓவல் வடிவ) உருட்டிக்கொள்ளவும்.

  5. 5

    ஓரங்களை கட் செய்து விட்டு செவ்வக வடிவமாக தேய்க்கவும்.

  6. 6

    இந்த தேய்த்த மாவை சூடான தவாவில் போட்டு 10 நிமிடங்கள் இரண்டு புறமும் ரோஸ்ட் செய்யவும். (சமோசா சீட்)

  7. 7

    ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் மற்றும் அவல் சேர்க்கவும்.

  8. 8

    அதில் மிளகாய்த்தூள்,கரம் மசாலா,சாட் மசாலா,உப்பு சேர்க்கவும்.

  9. 9

    பிறகு அதில் பச்சைமிளகாய்,கொத்தமல்லிதழை சேர்க்கவும்.

  10. 10

    இந்த கலவையை கலந்து தனியாக வைக்கவும்.

  11. 11

    இப்போது சமோசா சீட்டை முக்கோணவடிவில் மடித்து உள்ளே வெங்காய கலவையை வைத்து மடிக்கவும்.(ஸ்டப்பிங்)

  12. 12

    மைதா கலவையை வைத்து மூடி விடவும்.(மைதாவும் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்டாக கலக்கவும்)

  13. 13

    முக்கோண வடிவில் மூடி விடவும்.

  14. 14

    இதனை எண்ணெயில் பொன்னிறமான பொறிக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes