கடலை பருப்பு பிரதமன்/சன்னா தாள் பாயாசம்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

பிரதமன் ஒரு இனிப்பான டிஷ்(திக்கான பானம்)-பாயாசம் மாதிரியான பானம்.பாயாசத்திற்கும் இந்த பிரதமனிற்கு நிறைய வித்யாசம் உள்ள்து.பாயாசம் பாலினாலும் சர்க்கரையினாலும் செய்யப்படுகிறது.ப்ரத்மன் தேங்காய் பால் ,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கடலை பருப்பு பாயாசம் நம்முடைய பிரசித்தி பெற்ற ஸ்வீட்(திக்கான)ரிச் கீர் -வேக வைத்த பாசிப்பருப்புடன் , தேங்காய் பால்,வெல்லம் சேர்த்து செய்வது.இதனை கடலை பருப்பு பிரதமன் என்று அழைப்பதுண்டு.இது கேரளாவின் ஒருபிரபலமான பலகாரம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 நபருக்கு
  1. 1 கப்சன்னா தால்(வெள்ளை கொண்டகடலை)
  2. 1 கப்வெல்லம்
  3. 1/8 கப்ஜவ்வரிசி
  4. தண்ணீர்(வெள்ளை கொண்டகடலை வேகவைப்பதற்கு)
  5. 3/4 கப்தேங்காய் பால்(திக்கான-முதல் பால்)
  6. 1 1/2 கப்தேங்காய் பால்( இரண்டாம் & மூன்றாம் பால்)
  7. 8முந்திரி
  8. 1 தேக்கரண்டிஏலக்காய் பவுடர்
  9. 1/8 கப்நறுக்கிய தேங்காய் துண்டுகள்
  10. 3-4 மேஜைக்கரண்டிநெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு குக்கரில் நெய் விட்டு வெள்ளை கொண்டகடலை கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வறுக்கவும்

  2. 2

    குக்கரில் தண்ணீரை ஊற்றி 1 விசில் விட்டு மிதமான சூட்டில் 5 நிமிடம் வேக விடவும்

  3. 3

    பிரஷர் இறங்கியதும் கொண்டகடலை மசித்து தனியாக வைத்துக்கொள்ளவும்

  4. 4

    ஒரு கடாயில் ஜவ்வரிசியை நன்றாக வேகவிடவும்(கண்ணாடி போல்)

  5. 5

    ஒரு வாணலில் வெல்லம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்(வெல்லம் கரையும் வரை)

  6. 6

    பிறகு அதனுடன் வேகவைத்த கொண்டகடலை(சன்னா) மற்றும் ஜவ்வரிசியை சேர்த்து திக்காகும் வரை வேகவிடவும்

  7. 7

    பிறகு அதில் மூன்றாம் தேங்காய்பால் திக்காகும் வரை கொதிக்கவிடவும்

  8. 8

    பிறகு அதில் இரண்டாம் தேங்காய்பால் சேர்த்து கொஞ்சநேரம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்துவிடவும்.

  9. 9

    பிறகு அதில் ஏலக்காய் பவுடர் மற்றும் முதல் தேங்காய் பால் சேர்க்கவும்(திக்கான)

  10. 10

    கடாய் நெய் ஊற்றி முந்திரி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்து பாயாசம் மேல் தூவி சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes