பைனாபிள் மதுரா பச்சடி

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

பைனாபிள் பச்சடி:பைனாபிள் மதுரா பச்சடி-பைனாப்பிள்,வாழைப்பழம்,திரட்சை,மற்றும் தேங்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட இனிப்பான சைடிஷ்.இந்த சைடிஷ் திருமணங்களிலும்,கேரளா பண்டிகையின் போதும் பரிமாறப்படுகிறது(ஓணம் பண்டிகையின் போது).இந்த சைடிஷ் தென்னிந்தியா மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமானது

பைனாபிள் மதுரா பச்சடி

பைனாபிள் பச்சடி:பைனாபிள் மதுரா பச்சடி-பைனாப்பிள்,வாழைப்பழம்,திரட்சை,மற்றும் தேங்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட இனிப்பான சைடிஷ்.இந்த சைடிஷ் திருமணங்களிலும்,கேரளா பண்டிகையின் போதும் பரிமாறப்படுகிறது(ஓணம் பண்டிகையின் போது).இந்த சைடிஷ் தென்னிந்தியா மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமானது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 நபருக்கு
  1. 1 1/2 கப்பொடியாக நறுக்கிய அண்ணாசிப்பழம்
  2. 1/2 கப்பொடியாக நறுக்கிய நேந்திரம்பழம்
  3. 1/4 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  4. 1/2 தேக்கரண்டிசிகப்பு மிளகாய் தூள்
  5. சுவைக்கேற்பஉப்பு
  6. 10முந்திரி
  7. 15திராட்சை
  8. 1/2 தேக்கரண்டிசர்க்கரை
  9. 2 மேஜைக்கரண்டிதயிர்
  10. அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
  11. 3/4 கப்துருவிய தேங்காய்
  12. 1 தேக்கரண்டிசீரகம்
  13. 3பச்சை மிளகாய்
  14. தேவையான பொருட்கள்
  15. 1 மேஜைக்கரண்டிதேங்காய் எண்ணெய்
  16. 1 தேக்கரண்டிகடுகு
  17. 2காய்ந்த மிளகாய்
  18. 1 கொத்துகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் /மண்சட்டியில் பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழம், வாழைப்பழம்(நேந்திரம் பழம்),மஞ்சள் தூள்,சிகப்பு மிளகாய்த்தூள்,பச்சை மிளகாய்,உப்பு,தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.வெந்ததும் முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

  2. 2

    மூடி வைத்து பழங்கள் மிருதுவாகும் வரை வேகவிடவும்.(தண்ணீர் வற்றும் வரை)

  3. 3

    அந்த கலவை வெந்துகொண்டிருக்கும் போதே தேங்காய் துருவல்,பச்சை மிளகாய்,சீரகம் சேர்த்து நல்ல விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைத்த விழுதை வெந்து கொண்டிருக்கும் பழக்கலவையில் சேர்த்து வேகவிடவும்.அது கொதித்ததும் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்

  5. 5

    தயிருடன் உப்பு,சர்க்கரை சேர்த்து கலக்கவும்

  6. 6

    ஒரு சிறிய பேனில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு,காய்ந்தமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து பழக்கலவையில் ஊற்றவும்.

  7. 7

    பரிமாறுவதற்கு முன்பு10 நிமிடம் வரை மூடிவைக்கவும்.அப்பொழுதுதான் பழத்தின் சுவை கிரேவியில் இறங்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes