ராகி பெப்பர் இடியாப்பம்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#பெப்பர்

ராகி பெப்பர் இடியாப்பம்

#பெப்பர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 1 கப் ராகி மாவு
  2. 1/4 கப் அரிசி மாவு
  3. 11/2 கப் வெந்நீர்
  4. 1 சிட்டிகை உப்பு
  5. 1 தேக்கரண்டி எண்ணெய்
  6. தாளிக்க
  7. 1மேசைக்கரண்டி நெய்
  8. 1 தேக்கரண்டி மிளகுப் பொடி
  9. 5 முந்திரிப் பருப்பு
  10. 1 தேக்கரண்டி கடுகு உளுந்தம் பருப்பு
  11. 1 ஆர்க்கு கறிவேப்பிலை
  12. 10 சின்ன வெங்காயம்
  13. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் ராகி மாவு, கால் கப் அரிசி மாவுடன் சிட்டிகை உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு வெந்நீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் வைத்து இடியாப்பமாக இட்லி தட்டில் பிழியவும்.

  3. 3

    பிழிந்த இடியாப்பத்தை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.

  4. 4

    வெந்ததும் எடுத்து ஆறவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    கடாயில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    மிளகுப் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். உதிர்த்து வைத்த ராகி இடியாப்பம் சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடாகப் பரிமாறவும். தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. நெய் மணமும், மிளகின் காரமும் சுண்டி இழுக்கும்.

  7. 7
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes