இறால் மிளகாய் வறுவல்/Prawn chilli fry Recipe in Tamil)

இறாலை சுத்தம் செய்து கொண்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10நிமிடம் வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ,சோம்புத்தூள் சேர்த்து ஊறவைத்த இறாலை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி கடாயை 5நிமிடம் மூடிவைத்து இறாலை
வேகவைத்து, பிறகு ஒரு பிரட்டு பிரட்டி திறந்து வைத்து மிதமான தீயில் வைத்து இறாலை 5நிமிடம் முறுக விடவும்,அதில் ஒரு கை சின்னவெங்காயம் சேர்த்து இறாலை முறுக விடவும்,சுவையுடன் கூடியமுறுகல் இறால் மிளகாய் வறுவல் தயார்#Chef Deena
இறால் மிளகாய் வறுவல்/Prawn chilli fry Recipe in Tamil)
இறாலை சுத்தம் செய்து கொண்டு அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10நிமிடம் வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ,சோம்புத்தூள் சேர்த்து ஊறவைத்த இறாலை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி கடாயை 5நிமிடம் மூடிவைத்து இறாலை
வேகவைத்து, பிறகு ஒரு பிரட்டு பிரட்டி திறந்து வைத்து மிதமான தீயில் வைத்து இறாலை 5நிமிடம் முறுக விடவும்,அதில் ஒரு கை சின்னவெங்காயம் சேர்த்து இறாலை முறுக விடவும்,சுவையுடன் கூடியமுறுகல் இறால் மிளகாய் வறுவல் தயார்#Chef Deena
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 2
அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு அதில் சோம்பு சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு அதில் இறாலை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
பிறகு 5 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து,பிறகு திறந்து வைத்து சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி முறுகவிட்டு இறக்கவும்.
- 6
சுவையான,முறுகலான இறால் மிளகாய்வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நாட்டுக்கோழி மிளகு வறுவல்/ Pepper Chicken recipe in Tamil
மிளகு, சோம்பு, கருவேப்பிலை இவைகளை கடாயில் வறுக்கவும். பிறகு அரைத்து பொடி பண்ணி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது வதக்கி மிளகாய் தூள், அரைத்து பொடி பண்ணியதில் பாதி தூள் சேர்த்து நன்கு வதக்கி அதில் சுத்தம் செய்த கோழியை சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சிறிது சேர்த்து உப்பு சேர்த்து கிண்டி குக்கரை மூடவும். குக்கர் விசில் வந்துகுறைவான தீயில் 5நிமிடம். வைத்து குக்கரை திறந்தாள், கம,கம வாசனை யுடன், எண்ணெய் பிரிந்து மிகவும் ருசியான காரசாரமான மிளகு கோழிகறி தயார்#Chef Deena Yasmeen Mansur -
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
-
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
உருளைகிழங்கு வறுவல்
#pmsfamilyசோம்பு கசகசா பச்சை மிளகாய் தேங்காய் இஞ்சி பூண்டு அனைத்தும் கடாயில் போட்டு வதக்கி மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு கறிவேப்பிள்ளை சேர்த்து உருளை கிழங்கு சேர்த்து வேக விடவும் தேவையான நீர் உப்பு சேர்க்கவும் .பிறகு அரைத்த மசால் கலவையை சேர்க்கவும். உருளை கிழங்கு வறுவல் தயார்😊👍 Anitha Pranow -
முட்டை கொத்து பிரட் (muttai kothu Bread Recipe in Tamil)
வெங்காயம், தக்காளி வதக்கி ,அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, தனியாத்தூள், கரம்மசாலா சேர்த்து வதக்கி,மிளகு தூள், உப்புதூள் சேர்த்தமுட்டை கலவையை அதில் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் பிறகு அதில் பிரட்டை துண்டுகளாக்கி அதில் சேர்த்து வதக்கவும். சுவையான முட்டை கொத்து பிரட் தயார். #ChefDeena Yasmeen Mansur -
-
-
மண்பானை கோழி வறுவல்
நம் பாரம்பரிய உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மண்பானை சமையல்.. அதிலும் மண்பானையில் கோழி வறுவல் செய்தால் அதன் ருசிக்கு அளவே இல்லை..முதலில் ஒரு வானலில் ஏலக்காய், பட்டை, மிளகு,சீரகம்,தனியா,வர மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 முதல் 3 நிமிடம் வரை வறுக்கவும்.நன்கு ஆறவைத்து பின்னர் அரைக்கவும்.இப்போது ஒரு மண்பானையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்பின்னர் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும், மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.சிக்கன் நன்றாக வெந்ததும் சீரக தூள் சேர்க்கவும்..கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.. சுவையான மண்பானை கோழி வறுவல் தயார்.. San Samayal -
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
-
-
#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.. San Samayal -
-
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
-
-
சோம்பு ஸ்பெசல். குடைமிளகாய் உருளை ஸ்டப் (Kudaimilakaai urulai stuff recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து கடுகு ,,சோம்பு ,வெங்காயம் வதக்கவும். உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து இதனுடன் கலந்து மிளகாய் பொடி ,உப்பு ,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய் பாதி வெட்டி விதை எடுத்து அதில் மிளகாய் பொடி உப்பு கலந்து லேசா தண்ணீர் ஊற்றி உள்ளே வெளியே தடவி வெந்த உருளைக்கிழங்கு க்கலவையை கேரட்சீவியதுவைத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை குறைந்த தீயில் சுடவும். ஒSubbulakshmi -
சோயா மிளகு வறுவல்(Meal maker pepper fry)👌👌
#pms family மிகவும் சுவையான அற்புதமான குழந்தைகள் விரும்பும் சோயா மிளகு வறுவல் செய்ய முதலில் நமக்கு தேவையான சோயாவை சுடு நீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து விட்டு,பின் அதில் உள்ள தண்ணிரை நன்றாக வாசம் போக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சோம்பு,சீரகம் சேர்த்து பின் வர மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து எண்ணெயில் வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு பின் அதனுடன் 50 கிராம் சோயா(meal maker) சேர்த்து வதக்கி பின் அதனுடன் கரம் மசாலா,மல்லி தூள்,மிளகாய் தூள்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்..பின் சோயா கலவைகளுடன் பச்சை வாசம் போன பின் பெப்பர்(pepper) பொடி நன்றாக தூவி அதனுடன் தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி , கொத்துமல்லி இலை சேர்த்து கிளறி விட வேண்டும்... அற்புதமான வாசனையுடன் சோயா மிளகு வறுவல் தயார், இதனை தயிர் சாதம்,சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.👍👍 Bhanu Vasu -
கிரில்டு இறால்
#cookwithfriendsமிகச்சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து இறால் ஸ்டார்டர் உணவு.#cookwithfriends Manju Murali -
-
-
-
மீன் வறுவல்
#foodiesfindingsமீனை நன்கு கழுவி, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் மீன் துண்டுகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் ப்ரை ரெடி!!! Madras_FooDomain Official -
#ஹோட்டல் முறை குடல் குழம்பு
சுத்தம் செய்த குடலை மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவிடவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் குடலை நன்கு சேர்த்து வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்தூளையும், மட்டன் மசாலா, கரம் மசாலா, சாம்பார் தூள்தனியா தூள், மிளகுப்பொடியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். குடல் வெந்தவுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும் சேர்த்து கொதிக்க வைக்கவும்பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும் குடல் வெந்தவுடன் பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, 10நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். ஹோட்டல் முறை குடல் குழம்பு ரெடி………… Kaarthikeyani Kanishkumar -
-
செங்கல்பட்டு இறால் ரோஸ்ட் (Tawa prawn masa roast)
#vattaramசெங்கல்பட்டு மாவட்ட அசைவ உணவகங்களில் பிரபலமான இறால் ரோஸ்ட் செயல் முறை விளக்கம் இங்கு காண்போம். karunamiracle meracil -
-
More Recipes
- தேங்காய் பூண்டு துவையல் (Thengai poondu thuvaiyal Recipe in Tamil) #chefdeena
- ஸ்பெஷல் அடை தோசை (Healthy & Tasty) (adai dosai Recipe in Tamil)
- வரகு அரிசி வல்லாரை கீரை சாதம்(varakarisi vallarai keerai satham) #chefdeena
- தூதுவளை ரசம் (thoothuvalai Rasam Recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
கமெண்ட்