முருங்கைக் கீரை சூப்

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

முருங்கைக் கீரை சூப்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 2கப் முருங்கை கீரை
  2. 10சின்ன வெங்காயம் நறுக்கியது, 1தக்காளி
  3. 1முழு பூண்டு
  4. 5மிளகு
  5. அரை டீஸ்பூன் சீரகம்
  6. 50கிராம் பாசி பருப்பு
  7. தேவையான அளவுஉப்பு
  8. 3/4லிட்டர் தண்ணீர்
  9. 1/4லிட்டர் சுடுதண்ணீர்
  10. ஒன்றரை டீஸ்பூன் மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கர்-ல் மிளகு தூள் தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் சேர்த்து 3/4 லிட்டர் தண்ணீர் சேர்த்து 7 விசில் விட்டு இறக்கி வடிகட்டவும்.

  2. 2

    வடிகட்டியில் எஞ்சியுள்ளதை ஆற விட்டு மிக்ஸிக்கு மாற்றி அரைத்து,அதை 1/4 லிட்டர் சுடுதண்ணீர் கலந்து வடிகட்டவும்.

  3. 3

    வடிகட்டிய பின் கிடைத்த சூப் இல் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்து ஒரு கொதி வரும் வரை மிதமான தீயில் சூடு செய்து இறக்கவும்.

    அவ்வளவுதான். சுவையான முருங்கை கீரை சூப் ரெடி.

  4. 4

    நான் வடிகட்டியில் எஞ்சிய பொருட்களில் பாதி மட்டுமே அரைத்தேன். மீதியுடன் 2டீஸ்பூன் தே‌ங்கா‌ய் துருவல், உப்பு சேர்த்து, மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை கிளறி இறக்கி, கூட்டாக பயன் படுத்திக் கொண்டேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes