சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)

#GA4
இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன்.
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4
இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நான்கு வர மிளகாய் ஒரு ஸ்பூன் மிளகு சோம்பு சீரகத்தை ஒரு கொதி விட்டவுடன் ஆறிய பின்பு பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்பு சோயாவை சுடுதண்ணீரில் போட்டு ஸ்க்விஷ் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
வேகவைத்த சோயாவில் அரைத்த பேஸ்டை போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஊறவிடவும். பின்பு கடாயில் எண்ணெய் சேர்த்து ஒரு பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கிய பின்பு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சிறிது உப்பு சேர்த்து நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கிய பின் மஞ்சள் தூள் மல்லித் தூள் சேர்த்து கிளறி விடவும்.
- 5
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பச்சை வாசனை போன பின்பு ஊறவைத்த சோயாவை சேர்த்து நன்கு கிளறி கிரேவி போல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
பின்பு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)
- காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
- குஜராத்தி லாப்சி / broken wheat halwa (Kujarathi laabsi recipe in tamil)
- டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் (Dryfruit milkshake recipe in tamil)
- ஸ்பைசி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)



















கமெண்ட் (2)