சென்னை ஸ்பெஷல் சைதாப்பேட்டை வடகறி (Vada curry recipe in tamil)

#jan1 அசத்தலான வடகறி செய்முறை
சென்னை ஸ்பெஷல் சைதாப்பேட்டை வடகறி (Vada curry recipe in tamil)
#jan1 அசத்தலான வடகறி செய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் கடலைப்பருப்பு 2 மணி நேரம் ஊறவிடவும்.பிறகு மிக்ஸி ஜாரில் 1/2ஸ்பூன் சோம்பு 2 மிளகாய் 1 துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து பிறகு ஊறிய பருப்பு சேர்த்து அரைக்கவும்.
- 2
கொரகொரப்பாக அரிது கொள்ளவும்.பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
- 3
மிக்ஸி ஜாரில் 1/2 மூடி தேங்காய் சேர்த்து 8 முந்திரி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நறுக்கிய வெங்காயம் 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி சேர்த்து வதக்கவும்.இதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா,1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
தக்காளி நன்கு மசிந்து வந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- 7
இதனுடன் பொரித்து வைத்துள்ள வடை சேர்க்கவும்.மூடி போட்டு 3 நிமிடம் கொதிக்கவிடவும்.இறுதியாக கொத்தமல்லி இலை போட்டு பரிமாறவும்.
- 8
அசத்தலான வடகறி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
- சியா புட்டிங் (Chia pudding recipe in tamil)
- மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
- வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
- சப்ஜா லெமன் ஜூஸ் (Sabja lemon juice recipe in tamil)





















கமெண்ட்