எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)

#pt இந்த முள் கத்திரிக்காய்க்கு சமீபத்தில் தான் புவிசார் குறியீடு (geographical indication) கிடைத்தது.. அம்மா வீடு வேலூர் என்பதால் எனக்கு அங்கிருந்து அம்மா வாங்கிக் கொண்டு வருவார்கள் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.. வேலூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும்..

சமையல் குறிப்புகள்
- 1
இந்த வேலூர் கத்திரிக்காய் சுவை அருமையாக இருக்கும் ஆனால் அதில் அதிகமாக முள் இருக்கும் அதை பார்த்து முள்ளை மெதுவாக கத்தியில் சீவி எடுக்க வேண்டும்..
- 2
பாதி காம்பை மட்டும் வெட்டிவிட்டு கத்தரிக்காயை நான்காக கீறி உள்ளே சொத்தை அல்லது புழு இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.. ஏனென்றால் இந்த கத்திரிக்காயில் அதிகம் சொத்தையும் புழுவும் இருக்கும்...
- 3
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நாம் கீறி வைத்துள்ள கத்தரிக்காய்களை அதில் போட்டு பாதி வேகும் அளவு வறுத்தெடுக்கவும்..
- 4
இன்னொரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வெங்காயமும் தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும்.. வதக்கியது ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 5
புளியைக் கரைத்து எடுத்துக்கொள்ளவும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்..
- 6
அது கொதித்துக் கொண்டிருக்கும் போதே வெங்காயம் தக்காளி தேங்காய் அரைத்த விழுதை அதில் சேர்க்கவும்..
- 7
குழம்பு கொதித்து பச்சை வாசனை போன பிறகு அதில் நாம் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காய்களை சேர்க்கவும்.. இந்த கத்திரிக்காய் சாதாரண கத்திரிக்காய் போல் சீக்கிரமாக வேகாது சற்று நேரம் எடுக்கும்..
- 8
கத்திரிக்காயும் வெந்து குழம்பும் கெட்டியான பிறகு அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி இலைகளை தூவி கலந்து விடவும்.. இறுதியாக கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்..
- 9
இப்போது சுவையான, மணமான, காரசாரமான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்..
Similar Recipes
More Recipes

கமெண்ட் (8)