மட்டன் கைமா பால்ஸ் (Mutton kaima balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு, சோம்பு, சீரகம், கசகசா, மிளகு, பட்டை, பொட்டுக்கடலை, இவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு அதே மிக்ஸி ஜாரில் மட்டன் துண்டுகளை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த விழுதுடன் அரைத்த மட்டனையும் சேர்த்து நன்றாக பிசையவும். இதனுடன் கொத்த மல்லியை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துப் பிசையவும்.
- 4
பிசைந்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் உருட்டிய உருண்டைகளை அதில் போட்டு நன்றாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.
- 6
இப்பொழுது மிகவும் சுவையான சூப்பரான கோலா உருண்டை ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13497912














கமெண்ட்