முடக்கத்தான் கீரை அடை (mudakathan Keerai adai Recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#ஆரோக்கியஉணவு

முடக்கறுத்தான் கீரை என்பதே முடக்கத்தான் கீரை ஆனது. மூட்டு வலிக்கு நல்ல மருந்து. ஆரம்ப நிலையில் மூட்டு வலி உள்ளவர்கள் நாள்தோறும் முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வலி குறையும்.
இளம் வயதிலிருந்தே அடிக்கடி முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை
  2. 1/2 கப் பச்சரிசி
  3. 1/2 கப் புழுங்கலரிசி
  4. 1/2 தேக்கரண்டி மிளகு
  5. 1/4 தேக்கரண்டி சீரகம்
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையானஅளவு நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு மிக்சி ஜாரில் சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை, மிளகு, சீரகம், ஊற வைத்த அரிசி சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும்.

  3. 3

    அரைத்த மாவை தோசைக்கல்லில் அடையாக ஊற்றி சுற்றிலும் நல்லெண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.

  4. 4

    விரும்பிய சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes