பஞ்சு போன்ற உப்பலான கோதுமை மா பூரி...!

Fma Ash
Fma Ash @cook_20061862

எனக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளில் ஒன்றே பூரி. கீழே குறிப்பிட்டுள்ள செய்முறையில் ஆட்டா மாவுக்கு பதிலாக, கடலை மாவையும் பயன்படுத்தலாம்.

#goldenapron3

பஞ்சு போன்ற உப்பலான கோதுமை மா பூரி...!

எனக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளில் ஒன்றே பூரி. கீழே குறிப்பிட்டுள்ள செய்முறையில் ஆட்டா மாவுக்கு பதிலாக, கடலை மாவையும் பயன்படுத்தலாம்.

#goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
05 பரிமாறுவது
  1. 1 கப் ஆட்டா மா
  2. 1½ கப் கோதுமை மா
  3. 2 ஸ்பூன் கடலை மா
  4. 1 ஸ்பூன் எண்ணெய்
  5. சிறிதளவுபேக்கிங் சோடா [அப்பச்சோடா]
  6. ¾ கப் தண்ணீர் [கிட்டத்தட்ட]
  7. ½ ஸ்பூன் உப்பு
  8. (ஸ்பூன் = மேசைக்கரண்டி)
  9. (1 கப் = 128 கிராம்)
  10. (1/2 கப் = 64 கிராம்)
  11. (3/4 கப் = 96 கிராம்)

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஆட்டா மா, கோதுமை மா, கடலை மா, உப்பு, எண்ணெய்,பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாக நன்கு கலந்து கொள்ளவும்.

    * சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, கையில் ஒட்டாத பதம் வரும் வரை பிசைந்து கொள்ளவும். (ஒரே நேரத்தில் அனைத்து தண்ணீரையும் சேர்க்க வேண்டாம்)

  2. 2

    மேலும் 10 நிமிடங்கள் நன்றாக பிசையவும்.

    * அதிக கடினமாகவும் இல்லாமல், அதிக மென்மையாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட பதத்தில் இருக்க வேண்டும்.

    * மா கலவையின் மீது சிறிதளவு எண்ணெய் தடவி 15 நிமிடங்கள் வைக்கவும்.

  3. 3

    பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, வட்ட வடிவில் உருட்டிக் கொள்ளவும். (சிறிது தடிப்பமாக இருக்க வேண்டும்)

  4. 4

    இறுதியாக கடாயில், பொரிப்பதற்கு தேவையானளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் கொதித்த பிறகு பூரியை ஒவ்வொன்றாக பொரிக்கவும்.

    * எண்ணெய் சூடு மாறாமல் பேணிக் கொள்ளவும்.

  5. 5
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fma Ash
Fma Ash @cook_20061862
அன்று

Similar Recipes