பீச் தேங்காய் மாங்காய்  பட்டாணி சுண்டல் (Beach thenkaai maankaai pattaani sundal recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

பீச் தேங்காய் மாங்காய்  பட்டாணி சுண்டல் (Beach thenkaai maankaai pattaani sundal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் காய்ந்த மஞ்சள் பட்டாணி
  2. 1 பட்டை
  3. 2கிராம்பு
  4. 2ஏலக்காய்
  5. 1 டீஸ்பூன் சோம்பு
  6. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  7. நல்எண்ணெய்
  8. கறிவேப்பிலை
  9. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1 தக்காளி
  11. 2 +1வெங்காயம்
  12. 1/2டீஸ்பூன் தனியா தூள்
  13. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  14. உப்பு
  15. 2 பச்சை மிளகாய்
  16. தேங்காய் துருவல்
  17. பச்சை மாங்காய்
  18. மல்லி இலை
  19. பணி பூரியோட பூரி அல்லது தட்டை அல்லது உருளைக்கிழங்கு சமோசா

சமையல் குறிப்புகள்

  1. 1

    பட்டாணியை இரவு முழுதும் ஊறவிடவும்

  2. 2

    ஒரு குக்கரில் 5 விசில் விட்டு எடுக்கவும்

  3. 3

    ஒரு கடாயில் என்னைவிட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து அத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போகும்வரை வதக்கவும்

  5. 5

    அத்துடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்

  6. 6

    மஞ்சள் தூள், தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணிர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வேகவிடவும்

  7. 7

    அத்துடன் வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்றாக கலந்து வேகவிடவும்

  8. 8

    கடைசியாக மல்லி இலை தூவி இறக்கவும்

  9. 9

    பரிமாறுவதற்கு :
    ஒரு பாதிரத்தில் சிறிது பட்டாணி கலவை பின் நறுக்கிய வெங்காயம் பின் உடைத்த பூரி அல்லது தட்டை பின் பட்டாணி கலவை நறுக்கிய மாங்காய் பின் வெங்காயம் பட்டாணி கலவை வெங்காயம், தேங்காய்,நறுக்கிய மாங்காய் இறுதியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து பரிமாறவும்

  10. 10

    குறிப்பு : இந்த பட்டாணி கலவையை உருளைக்கிழங்கு சமோசா உடனும் பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Epsi beu @ magical kitchen
அன்று
KR puram
I am 17 years old girl but i love to cook new recipes.my mom is my inspiration she cook tasty food....whenever i get time i will do.... cooking is an art i just loved it
மேலும் படிக்க

Similar Recipes