நெய் பன்னீர் வறுவல் (Nei paneer varuval recipe in tamil)

Regional Foodie
Regional Foodie @cook_26320594

பன்னீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு. அதனை கொஞ்சம் காரசாரமாக மதியஉணவுக்கு சாப்பிட பரிமாறும்பொழுது அனைவரும் அதனை விரும்பி உண்பர், இதுவே இந்த உணவு உருவாக/செய்ய காரணம் #thechennaifoodie #cookpadtamil #thechennaifoodie #cookpadtamil

நெய் பன்னீர் வறுவல் (Nei paneer varuval recipe in tamil)

பன்னீர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு. அதனை கொஞ்சம் காரசாரமாக மதியஉணவுக்கு சாப்பிட பரிமாறும்பொழுது அனைவரும் அதனை விரும்பி உண்பர், இதுவே இந்த உணவு உருவாக/செய்ய காரணம் #thechennaifoodie #cookpadtamil #thechennaifoodie #cookpadtamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  1. 250 கிராம் பன்னீர்
  2. 1/2 கப் தயிர்
  3. 1எலுமிச்சை சாறு பழம்
  4. 1/2 தேக்கரண்டிஉப்பு
  5. மசாலா விழுது அறைக்க
  6. 5காஷ்மீரி சிவப்பு மிளகாய்
  7. 2காய்ந்த சிவப்பு மிளகாய்
  8. 4 தேக்கரண்டிதனியா
  9. 1/2 தேக்கரண்டிமுழு மிளகு
  10. 1 தேக்கரண்டிசீரகம்
  11. 1/2 தேக்கரண்டிசோம்பு
  12. 1/2 தேக்கரண்டிவெந்தயம்
  13. 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுந்து
  14. 1 சிறிய துண்டுபுளி
  15. 1 தேக்கரண்டிநெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 250 கிராம் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அதனுடன் தயிர், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக சேர்த்து கலந்த பின் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். #thechennaifoodie

  2. 2

    அந்த நேர இடைவெளியில் ஒரு சிறு வாணலியில் காஷ்மீரி மிளகாய் மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய், தனியா, சீரகம், சோம்பு, வெந்தயம், முழு மிளகு ஆகியவற்றை சேர்ந்து நன்றாக ஓரிரு நிமிடங்கள் வதக்கி கொள்ள வேண்டும்.

  3. 3

    வதக்கியவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ள வேண்டும்.

  4. 4

    இப்பொழுது மீண்டும் ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி நெய் விட்டு தயார் செய்த விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுந்து மற்றும் புளி கரைசல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் வதக்கவும், சிறிது நீர் ஊற்றி நன்றாக அந்த பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கி கொள்ளலாம்.

  5. 5

    பிறகு ஊறவைத்த பன்னீரை இதோடு சேர்த்து, மீண்டும் சிறிது நெய் சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும். ஒரு 10-15 நிமிடங்கள் அடிப்பிடிகாதவாறு நன்றாக அனைத்தையும் கிளறிக்கொள்ள வேண்டும்.

  6. 6

    இறுதியை சிறிது கொத்தமல்லி தலையை நறுக்கி அதன்மேல் தூவி பரிமாறினாள் நன்றாக அனைவரும் உண்டு மகிழ்வர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Regional Foodie
Regional Foodie @cook_26320594
அன்று

Similar Recipes