கம்பு தயிர் சாதம் (Kambu thayir satham recipe in tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

கம்பு தயிர் சாதம் (Kambu thayir satham recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்கம்பு
  2. 5 அல்லது 7சின்ன வெங்காயம்
  3. 1ப.மிளகாய் -
  4. தயிர் -தேவையான அளவு
  5. உப்பு - தேவையான அளவு
  6. தாளிக்க வேண்டியவை :
  7. 1/2 தே.கஎண்ணெய் -
  8. 1/4 தே.ககடுகு -
  9. 1காய்ந்த மிளகாய் -
  10. பெருங்காய துள் - சிறிது
  11. கறிவேப்பிலை - சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    கம்பை கழுவி விட்டு 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். (நேரம் கூட ஊறினால் பரவாயில்லை). தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக உடைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த கம்புடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து + ப.மிளகாய் + வெங்காயம் சேர்த்து மைக்ரோவேயில் 6 நிமிடங்கள் வைக்கவும். நடுநடுவே கிளறிவிடவும்.

  4. 4

    வாணலியில் கொதிக்கவிட 10 நிமிடங்களில் வெந்து விடும்.
    சூடு ஆறிய பின் தயிர் + உப்பு சேர்த்து கலக்கவும்.

  5. 5

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து தயிர் சாதத்தில் கலந்து பரிமாறவும்.

  6. 6

    சுவையான சத்தான கம்பு தயிர் சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes