கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)

Thara
Thara @cook_26879129

#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena

கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)

#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப்கோதுமை மாவு
  2. 1கப்வெல்லம்
  3. 1கப்தேங்காய் துருவல்
  4. ஏலக்காய் பொடி
  5. உப்பு கால் ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  7. 2ஸ்பூன்நெய்
  8. தேவையானஅளவு தண்ணீர்
  9. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்

  2. 2

    பிசைந்து கொடுக்கும் போது கையில் பிடிக்காத அளவிற்கு எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்

  3. 3

    பிசைந்த மாவின் மேல் நன்கு எண்ணெய் தடவி 2 முதல் 3மணிநேரம் ஊர் வைத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    பூர்ணம் செய்ய தேங்காய்துருவலை வதக்கி கொள்ளவும் பின்புஅடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி,சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்,

  5. 5

    இதற்கு பாகு பக்குவம் தேவை இல்லை, நன்கு கெட்டியாக வரும் வரை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும், கடைசியாக நெய் சேர்த்து இறக்கி ஆற வைக்கவும்

  6. 6

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும், பூர்ணத்தையும் சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்

  7. 7

    பட்டர் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் கவர் எடுத்து கொண்டுஅதன் மீது மாவு உருண்டை வைத்து கொஞ்சம் கையால் அகல படுத்தி அதில் பூர்ண உருண்டை வைத்து, மீண்டும் உருண்டை போல் மூடி சப்பாத்தி போல மெதுவாக தட்ட வேண்டும்

  8. 8

    தோசை கல்லில் நெய் தடவி காய்ந்த பிறகு தட்டி வைத்துள்ள போலியை போட்டு இரண்டு புறமும் வேகும் வரை திருப்பி திருப்பி போட்டு சுற்றி நெய் அல்லது எண்ணெய் விட வேண்டும், சுவையான தேங்காய் போலி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Thara
Thara @cook_26879129
அன்று

Similar Recipes