தேங்காய் போலி/ ஒப்பிட்டு

sivaranjani
sivaranjani @cook_26935534

இது என் அம்மாவின் ரெசிபி.. இந்த ஒப்பிட்டு அவர்கள் மிக சுவையாக செய்வார்கள்.. #skvdiwali #deepavali..
@cookpad_ta மற்றும் @sakarasaathamum_vadakarium இணைந்து வழங்கும் தீபாவளி குலாபேரேஷனின்..

தேங்காய் போலி/ ஒப்பிட்டு

இது என் அம்மாவின் ரெசிபி.. இந்த ஒப்பிட்டு அவர்கள் மிக சுவையாக செய்வார்கள்.. #skvdiwali #deepavali..
@cookpad_ta மற்றும் @sakarasaathamum_vadakarium இணைந்து வழங்கும் தீபாவளி குலாபேரேஷனின்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
2 பரிமாறுவது
  1. தேங்காய் துருவல்-1
  2. மைதா மாவு-2கப்
  3. வெல்லம் 2கப்
  4. ஏலக்காய் தூள்-1ஸ்பூன்
  5. நெய்-2ஸ்பூன்
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    சட்டியில் நெய் ஊற்றி அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  2. 2

    இரண்டு நிமிடம் வதக்கியதும், அதன் உடன் வெள்ளம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  3. 3

    பச்சை வாசனை போனதும், ஏலக்காய் தூள்-1ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    மைதா மாவு-2கப் எடுக்கவும், தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து மாவு பதத்தில் பிசையவும்.மாவு உருண்டையாக வந்ததும்,அதை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  5. 5

    அரை மணி நேரம் ஊறியதும், சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

  6. 6

    ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி போல் தேய்க்கவும்.

  7. 7

    நடுவில் தேங்காய் பூரணம் வைத்து, மாவை கொண்டு மூடி பூரணம் வெளியே வராதவாறு மூடி வைக்கவும்

  8. 8

    அதை கையால் மெதுவாக அழுத்தி அழுத்தி சப்பாத்தி போல் பெரியதாக தேய்த்து சூடான கல்லில் மாவை வைத்து இரண்டு பக்கங்களிலும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.

  9. 9

    அதன் மேல் நெய் ஊற்றி எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
sivaranjani
sivaranjani @cook_26935534
அன்று

Similar Recipes