பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#GA4
#week6
Paneer

பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)

#GA4
#week6
Paneer

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  1. 200 கிராம் பனீர்
  2. 1 குடை மிளகாய்
  3. 1 வெங்காயம்
  4. 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  5. தேவையானஅளவு உப்பு
  6. 4மேசைக்கரண்டி எண்ணெய்
  7. மசாலா அரைக்க
  8. 1 வெங்காயம்
  9. 2 தக்காளி
  10. 1 இன்ச் அளவு இஞ்சி
  11. 5 பல் பூண்டு
  12. வறுத்துப் பொடிக்க
  13. 4 காஷ்மீர் மிளகாய் வத்தல்
  14. 1மேசைக்கரண்டி மல்லி
  15. 1 தேக்கரண்டி மிளகு
  16. 1சிறு துண்டு பட்டை
  17. 4 கிராம்பு
  18. 2 ஏலக்காய்
  19. 1 கறுப்பு ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடிக்கவும்.

  2. 2

    வெங்காயம், குடைமிளகாய், பனீரை சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    2 தக்காளி மற்றும் இரண்டு வெங்காயத்தை நறுக்கி, இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்கி ஆற வைக்கவும்.

  4. 4

    ஆறியதும் மிக்ஸியில் நன்கு விழுதாக அரைக்கவும்.

  5. 5

    கடாயில் மீதமுள்ள மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். நிறம் மாறியதும் குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    பின்னர் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.

  7. 7

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

  8. 8

    பின்னர் பனீர் சேர்த்துக் கொள்ளவும். கிரேவி சற்று வற்றியதும் வறுத்துப் பொடித்த மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

  9. 9

    சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes