அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.
#Pooja

அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)

பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.
#Pooja

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
  1. 1/2 கப் பாசுமதி அரிசி
  2. 1&1/2 லிட்டர் பால்
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 3 டேபிள் ஸ்பூன் பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல்
  5. ஒரு சிட்டிகை ஏலக்காய்
  6. குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். கொதிக்கும் பாலை ஆடை காட்டாத மாதிரி கலந்து கொண்டே இருக்கவும்.

  2. 2

    பின்னர் பாசுமதி அரிசியை நன்கு கழுவி, கொதிக்கும் பாலில் சேர்த்து, மிதமான சூட்டில் வைத்து வேகவைக்கவும்.

  3. 3

    அரிசி நன்கு வெந்தவுடன் குங்குமப்பூ, சர்க்கரை சேர்க்கவும். நன்கு வேகவிடவும்.

  4. 4

    பால் நன்கு வற்றி, அரிசி, சர்க்கரை எல்லாம் சேர்ந்து நன்கு வெந்து ஒரு கிரீமி பதம் வந்தவுடன், குங்குமப்பூ, ஏலக்காய் தூள், நட்ஸ் துருவல் சேர்த்து இறக்கினால் அரிசி பாயாசம் தயார்.

  5. 5

    இந்த அரிசி பாயாசம் பொறுமையாக செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes