மடத்த காஜா (Madatha kaja recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

மைதா மாவில் செய்த இந்த ஸ்வீட் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபம். ஆனால் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக் கும். மாதக்கணக்கில் வைத்து சுவைக்கலாம்.
#Flour

மடத்த காஜா (Madatha kaja recipe in tamil)

மைதா மாவில் செய்த இந்த ஸ்வீட் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபம். ஆனால் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக் கும். மாதக்கணக்கில் வைத்து சுவைக்கலாம்.
#Flour

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி 40 நிமிடங்கள்
  1. 2 கப் மைதா
  2. 2 கப்ṣநெய்
  3. 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. 2 கப் சர்க்கரை
  5. ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

1மணி 40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் மைதா மாவு, நெய், உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து, பின்பு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கை வைத்து நன்கு மாவு பிசையவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, சர்க்கரை சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். கொதித்து சர்க்கரை பாகு பதத்திற்கு முன்பு எடுத்து விடவும். பாகில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.

  3. 3

    அதன் பின் தயாராக வைத்துள்ள மாவை எடுத்து சப்பாத்தி போல் தேய்க்கவும். தேய்க்கும்போது மாவு தூவி தேய்க்கவும்.பின் ரோல் செய்யவும். சிறிய துண்டுகளாக கட் செய்யவும்.

  4. 4

    கட் செய்த துண்டுகளை, பெருவிரல் வைத்து ஒரு அழுத்தம் கொடுத்து, சப்பாத்தி ரோலர் வைத்து மெதுவாக தேய்த்து வைத்துக்கொள்ளவும்.

  5. 5

    அதன்பின் கடாயில் எண்ணை ஊற்றி சூடு செய்து, மிதமான சூட்டில் வைத்து தயார் செய்து வைத்துள்ள கஜாக்களை போட்டு, பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

  6. 6

    பொறித்தெடுத்த கஜாக்களை முதலில் தயாரித்து வைத்துள்ள சர்க்கரை பாகில் போட்டு ஐந்து நிமிடங்கள் விட்டு எடுத்தால் காஜா தயார்.

  7. 7

    இப்போது சுவையான, கிரிஸ்ப்பியான மடத்த காஜா சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes