ஃபிஷ் பஜ்ஜி (Fish bajji recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

ஃபிஷ் பஜ்ஜி (Fish bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பேர்
  1. 1/2 கிலோ சதைப் பற்றுள்ள முள்ளில்லாத மீன் துண்டுகள்
  2. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  3. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 11/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/4 ஸ்பூன்மிளகு தூள்
  6. 1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1 முட்டை
  9. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
  10. 1 ஸ்பூன் கடலை மாவு
  11. 2 ஸ்பூன் சோள மாவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மீன் துண்டுகளை கழுவி சுத்தமாக்கிக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பவுளில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள், தேவைக்கு உப்பும் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

  3. 3

    இதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  4. 4

    இதில் மீன் துண்டுகளை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  5. 5

    பின்னர் இதில் கடலைமாவு,சோள மாவு இரண்டையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து, மசாலா எல்லாப்
    பக்கமும் படும் அளவிற்கு நன்றாகப் புரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  6. 6

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும்,ஊற வைத்த மீனை எண்ணெயில் போடவும்.

  7. 7

    ஒரு பக்கம் வெந்ததும் மறித்துப் போடவும்.

  8. 8

    இரண்டு பக்கமும் வெந்து கோல்டன் ப்ரவுன் கலரில் ஆகி வரும் போது எண்ணெயில் இருந்து கோரி எடுக்கவும்.

  9. 9

    சுவையான சூப்பரான ஃபிஷ் பஜ்ஜி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes