மீன் வறுவல்(fish fry recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#Vn என்ன தான் வகை வகையாய் காய்கறிகள் கொண்டு சமைத்தாலும்,என் வீட்டில் அனைவரும் விரும்புவது அசைவம் தான். அது, எளிமையாக இருந்தாலும் சரி,சிறப்பாக இருந்தாலும் சரி...

மீன் வறுவல்(fish fry recipe in tamil)

#Vn என்ன தான் வகை வகையாய் காய்கறிகள் கொண்டு சமைத்தாலும்,என் வீட்டில் அனைவரும் விரும்புவது அசைவம் தான். அது, எளிமையாக இருந்தாலும் சரி,சிறப்பாக இருந்தாலும் சரி...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
4பேர்
  1. 1/2கிலோ மீன்
  2. 1இன்ச் இஞ்சி
  3. 1முழு பூண்டு
  4. 1/2ஸ்பூன் பெருஞ்சீரகம்
  5. 1/2ஸ்பூன் சீரகம்
  6. 1/2ஸ்பூன் மிளகு
  7. பாதி எலுமிச்சம் பழச்சாறு
  8. 1.5ஸ்பூன் சோள மாவு
  9. 1/2ஸ்பூன் மல்லிதூள்
  10. 1டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  11. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 1/2ஸ்பூன் கரம் மசாலா
  13. தேவையானஅளவு உப்பு
  14. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    மிக்சிஜாரில்,மிளகு, இஞ்சி,பூண்டு,சீரகம், பெருஞ்சீரகம், சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

  3. 3

    இதனுடன் மசாலா பொருள்கள் அனைத்தையும் சேர்த்து எலுமிச்சை சாறு கலந்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

  4. 4

    இதனுடன் லேசாக தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும்.

  5. 5

    இனி,மீன் துண்டுகளில் இந்த மசாலா சேர்த்து தடவி 1மணி நேரம் ஊற விடவும்.

  6. 6

    பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    அவ்வளவுதான். சுவையான,மீன் வறுவல் ரெடி.
    இந்த மசாலா எந்த வகையான மீங்களுக்கும் பயன்படுத்தலாம். சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes