ராஜ்மா கறி (Rajma curry recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

#GA4 Week21

ராஜ்மா கறி (Rajma curry recipe in tamil)

#GA4 Week21

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் ராஜ்மா (ஊறவைத்தது)
  2. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  3. 1டீஸ்பூன் சீரகம்
  4. 1டீஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட்
  5. 1பெரிய வெங்காயம் நறுக்கியது
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 2டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  8. 1டீஸ்பூன் தனியா தூள்
  9. 1டீஸ்பூன் சீரக தூள்
  10. 1டீஸ்பூன் கரம் மசாலா
  11. 3தக்காளி
  12. 1டீஸ்பூன் மாங்காய் தூள்
  13. உப்பு
  14. தண்ணீர்
  15. 1டீஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ராஜ்மா பீன்ஸ்'ஸை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். ஊறிய ராஜ்மா பீன்ஸ்'ஸை குக்கர்'ரில் போட்டு 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேரியதும், இதில் சீரகம், தட்டிய இஞ்சி பூண்டு விழுது, பெரிய வெங்காயம், போட்டு வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் பொன்னிறமானதும், இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.

  4. 4

    அடுத்து இதில் தக்காளி விழுது சேர்த்து, இதில் உள்ள ஈரம் போகும் வரை வதக்கவும்.

  5. 5

    பின் இதில் வேகவைத்த பீன்ஸ்'ஸை, வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து கடாயில் ஊற்றவும்.

  6. 6

    இதில் மாங்காய் தூள் சேர்த்து, கடாயை மூடி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

  7. 7

    இறுதியாக இதில் சர்க்கரை சேர்த்து இறக்கவும். சுவையான ராஜ்மா கறி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes