சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட், பீன்ஸ், சோளம், பெரிய வெங்காயம், முட்டைகோஸ், மற்றும் பூண்டை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து அரை கப் அளவு சோளத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். - 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெய்யை சேர்த்து சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்டதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். - 3
பூண்டின் பச்சை வாசம் போனதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள கேரட் பீன்ஸ் சோளம் மற்றும் முட்டை கோசை அதில் போட்டு கிளறவும். - 4
பிறகு அரைத்து வைத்துள்ள சோளத்தை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். (சூப் சிறிது திக்காக வருவதற்கே சோளத்தை அரைத்து சேர்க்கிறோம்.)
இப்பொழுது இந்த கலவையுடன் 5 கப் அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மூடி போட்டு சுமார் 20 நிமிடம் வரை காய்கறிகளை வேக விடவும். - 5
20 நிமிடத்திற்குப் பிறகு திறந்து பார்த்தால் காய்கறிகள் நன்றாக வெந்திருக்கும். (காய்கறிகள் வேகாமல் இருந்தால் இன்னும் ஒரு 4 அல்லது 5 நிமிடம் வேக விடவும்.)
சூப் தண்ணியாக இருந்தால் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கின்ற சூப்புடன் சேர்த்து கலக்கி இன்னும் ஒரு 3 நிமிடம் வரை கொதிக்க விடவும். - 6
3 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு மிளகுதூள் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
சூப்பை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் நறுக்கி வைத்துள்ள ஸ்பிரிங் ஆனியன் தூவி ஒரு கலக்கு கலக்கி இறக்கவும். - 7
இப்பொழுது உங்கள் சூடான சுவையான மற்றும் சத்தான வெஜிடபிள் சூப் தயார். இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சூப் ஸ்டிக்ஸ்லோடு பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெஜிடபிள் சூப்
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சூப். காபி, டீ க்கு பதிலாக குடிக்கலாம்.#GA4SoupWeek10 Sundari Mani -
ஹெல்தி வெஜிடபிள் சூப் for kids
Specially for Infant Baby [start giving from 8 to 10 month old] BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
ஈசி வெஜ் ஃப்ரைட் ரைஸ்(Easy Veg Fried Rice recipe in Tamil)
* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வெஜ் ப்ரைட் ரைஸ் இனி வீட்டிலேயே மிக எளிதாக செய்து விடலாம். kavi murali -
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
-
-
-
வெஜிடபிள் குருமா
இதன் சுவை மிக வித்தியாசமாக இருக்கும். இதை பிரட்டில் சாண்ட்வெஜ் ஆக வைத்து யூஸ் பண்ணலாம் அல்லது சப்பாத்தியை வைத்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
-
-
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்