சாப்ட் இட்லி.

#combo - 1 Idly... இட்லி எல்லோருக்கும் தெரிஞ்ச, பிடித்தமான தினம் தினம் செய்யும் உணவு... என்னுடைய செய்முறை..
சாப்ட் இட்லி.
#combo - 1 Idly... இட்லி எல்லோருக்கும் தெரிஞ்ச, பிடித்தமான தினம் தினம் செய்யும் உணவு... என்னுடைய செய்முறை..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லி அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை நன்றாக கழுகி, களைந்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக்கவும்.
- 2
4மணி நேரத்துக்கு பிறகு கிரைண்டரில் முதலில் உளுத்தம்பருப்பை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி தெளிச்சு 15 - 20 நிமிடம் அரைத்துக்கவும். மாவு சாப்ட் பஞ்சுப்போலே இருக்கும், தண்ணீரில் கொஞ்சம் மாவை எடுத்து தண்ணீரில் போட்டு பாத்தால் மாவு மிதக்கும்..
- 3
உளுத்தம்பருப்பு வழித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து விட்டு, கிரைண்டரில் அரிசியை போட்டு தேவையான தண்ணி விட்டு ரவை பதத்துக்கு அரைத்து கடைசியில் உப்பு போட்டு அரைத்து வழித்து உளுத்தம் மாவுடன் கலந்து நன்றாக கை போட்டு கரைத்து வைத்து விடவும்.8 மணி நேரம் மாவை புளிக்க விடவும், மாவு நன்கு பொங்கி இருக்கும்
- 4
நன்கு பொங்கின மாவை கரண்டியால் ரொம்ப கல க்காமல் மெதுவாக எடுத்து எண்ணை தடவிய இட்லி தட்டில் ஊற்றி இட்லி குக்கர் அல்லது கொப்பரையில் ஸ்டவ்வில் வைத்து 10 - 15 நிமிடம் வேக விட்டு எடுக்கவும்...
- 5
சுட சுட மல்லிகை பூ இட்லி தயார்.. அருமையான சுவையான சாப்ட் இட்லியை சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னி, மிளகாய் பொடியுடன் தொட்டு சாப்பிடவும்...
Similar Recipes
-
-
-
நெய் இட்லி சாம்பார்.
#combo-1..இட்லியுடன் தொட்டு சாப்பிட சாம்பார் தான் சரியான காம்பினேஷன்.. பல விதமாக செய்வார்கள்.. நான் என்னுடைய செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்.. Nalini Shankar -
-
-
-
-
மல்லிகைப்பூ இட்லி
#Combo1ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்கஇட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்குறிப்பு:பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும் Sudharani // OS KITCHEN -
இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார்
#Combo special 1இட்லிக்கு சாம்பார் தான் சரியான மேட்ச். இந்த சின்ன வெங்காயம் சாம்பார் இன்னும் சூப்பராக இருக்கும். Sundari Mani -
-
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
பாலக் கீரை அடை தோசை
#Queen - 1 - adai dosaiபாலக் கீரை சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்த காரசாரமான பச்சை நிற அடை தோசை.... Nalini Shankar -
ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)
ராகி இட்லி அரிசியுடன் சேர்த்து செய்தது.இதற்கு முன்னால் அறிசியே சேர்க்காமல் செய்தேன். Meena Ramesh -
-
-
காரசாரமான குர்குரே இட்லி.
#leftover... மீதம் வந்த இட்லியை குழந்தைகளுக்கு பிடித்தமான இட்லி குர்குரே செய்து குடுத்தேன்...அவளவு சந்தோஷபட்டர்கள்... Nalini Shankar -
சாஃப்ட் இட்லி
#Everyday1இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம் Sudharani // OS KITCHEN -
-
சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த மல்லி பூ போல இட்லி . இட்லி சாம்பார் ஒரு முழு உணவு . மிகவும் ஆரோக்கியமான நான் எப்பொழுதும் மாவுடன் ஈஸ்ட் சேர்ப்பேன். அமெரிக்காவில் அப்பொழுதுதான் இட்லி பொங்கும். ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். #combo1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
மரவள்ளிக்கிழங்கு இட்லி
#breakfastகாலை உணவு வகைகள்மரவள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை பயன்படுத்தி இட்லி செய்யலாம். காலை நேரத்தில் எண்ணெய் இல்லாமல் ஆவியில் வேக வைப்பதால் மிகவும் நல்லது. Sowmya sundar -
-
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam -
வெந்தய இட்லி
#இட்லிஇட்லி !!ஆம் நாம் உளுந்து இட்லி, ராகி இட்லி குஷ்பூ இட்லி ,கோதுமை இட்லி என்று பல வகைகள் இட்லி செய்து இருப்போம். வெந்தய இட்லி வணக்கிய வெங்காய சட்னி எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்கிறோம் .வெந்தயம் குளிர்ச்சி தரக்கூடியது .உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்றது. சத்தானது.சுவையானது . Shyamala Senthil
More Recipes
கமெண்ட்