Peppy Paneer Pizza 🍕

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145

#AsahikaseiIndia
It's time to bake

Peppy Paneer Pizza 🍕

#AsahikaseiIndia
It's time to bake

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி 15 நிமிடம்
2 பேர்
  1. பீட்சா பேஸ் செய்ய தேவையான பொருட்கள்
  2. 200g மைதா மாவு
  3. 1/2 ஸ்பூன் உப்பு
  4. 1/4 கப் பால்
  5. 1 ஸ்பூன் சக்கரை
  6. 1 ஸ்பூன் ஈஸ்ட்
  7. 5 ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  8. 1/4 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  9. பீட்சா சாஸ் செய்ய தேவையான பொருட்கள்
  10. 6தக்காளி
  11. 10பல் பூண்டு நறுக்கியது
  12. 1 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  13. 1 ஸ்பூன் சர்க்கரை
  14. 1/2 ஸ்பூன் உப்பு
  15. 3 ஸ்பூன் தக்காளி சாஸ்
  16. 5காஷ்மீரி காஞ்ச மிளகாய்
  17. 1பெரிய வெங்காயம் நறுக்கியது
  18. 1 ஸ்பூன் மிக்ஸட் ஹேர்ப்
  19. 1/2 ஸ்பூன் பேசில்
  20. பெப்பி பன்னீர் செய்ய தேவையான பொருட்கள்
  21. 100 g பன்னீர்
  22. 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  23. 1/2 ஸ்பூன் வரமிளகாய்த்தூள்
  24. 2 பின்ச் உப்பு
  25. 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  26. பீட்சா செய்வதற்கு தேவையான பொருட்கள்
  27. பீட்சா பேஸ் மாவு
  28. பீட்சா சாஸ்
  29. 1 கப் மோசெரில்ல சீஸ்
  30. 1குடமிளகாய்
  31. 1 பெரிய வெங்காயம்
  32. 7பீஸ் ஜலபினோ
  33. 1 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  34. 1 ஸ்பூன் பேசில்

சமையல் குறிப்புகள்

1மணி 15 நிமிடம்
  1. 1

    முதலில் பீட்சா மாவு செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கப்பில் 1 ஸ்பூன் ஈஸ்ட், 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டு அதில் கால் கப் வெதுவெதுப்பான பால் சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும். அதன்பின் பார்த்தால் ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகிவிடும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவு,ஆக்டிவேட் செய்த ஈஸ்ட், 1/2 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு,ஆலிவ் ஆயில், தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து வைக்கவும்.

  4. 4

    பிசைந்து வைத்த மாவை அரை மணி நேரம் மூடி வைக்கவும்

  5. 5

    பீட்சா சாஸ் செய்யும் முறை:
    பிஸ்ஸா சாஸ் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைக்கவும்.

  6. 6

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், காஷ்மீர் மிளகாய், தக்காளி சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

  7. 7

    தக்காளி வெந்தவுடன் அதன் தோலை நீக்கிவிடவும்... காஞ்ச மிளகாய், வெங்காயம்,தோல் நீக்கிய தக்காளி சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைக்கவும்.

  8. 8

    ஒரு வாணலியில் 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், நறுக்கிய பூண்டு,அரைத்த தக்காளி மசாலா,ஒரு ஸ்பூன் சில்லி ஃப்ளெக்ஸ்,1 ஸ்பூன் பேசில், 1 ஸ்பூன் சர்க்கரை,1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்..

  9. 9

    பிறகு அதில் 3 ஸ்பூன் தக்காளி சாஸ், சிறிது மிக்ஸட் ஹெர்பெஸ் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டால் பீட்சா சாஸ் ரெடி ஆகி விடும்...

  10. 10

    பெப்பி பன்னீர் செய்யும் முறை:
    ஒரு பாத்திரத்தில் 100 கிராம் பன்னீர்,1/2 ஸ்பூன் உப்பு,,1/2 ஸ்பூன் வரமிளகாய் தூள்,1 ஸ்பூன் ஆலிவ் ஆயில்,1/2 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும்...

  11. 11

    பிட்சா செய்யும் முறை:
    நாம் பிசைந்து வைத்த மாவு இப்பொழுது இரண்டு மடங்காக மாறியிருக்கும்.அதனை மறுபடியும் பிசைந்து சப்பாத்தி கட்டையில் வட்ட வடிவத்திற்கு தேய்க்கவும். அதை பீட்சா செய்யும் தட்டில் மாற்றி போர்க் ஸ்பூன் வைத்து ஆங்காங்கே சிறிய ஓட்டைகள் போடவும்.....

  12. 12

    பிறகு அதன் மேல் பிஸ்ஸா சாஸ், மொஸீரில்ல சீஸ்,குடமிளகாய்,
    வெங்காயம், ஜலபெனோ, பன்னீர் சேர்க்கவும்......

  13. 13

    மீண்டும் அதன் மேல் மொஸிரில்ல
    சீஸ், சிறிது சில்லி ஃப்ளேக்ஸ்,ஆர்கனோ சேர்த்து மைக்ரோ ஓவனில் 200 டிகிரி பாரன்ஹீட், 40 நிமிடம் டைமர், ஆன் செய்யவும்..

  14. 14

    இப்பொழுது அருமையான domino's Peppy Paneer Pizza ரெடியாகிவிட்டது....

  15. 15

    பீசா மேல் பீசா டாப்பிங் சேர்த்து,தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kalaiselvi
Kalaiselvi @cook_26869145
அன்று

Similar Recipes