சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ப்ரெஸ்ஸர் குக்கரில் நெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
- 2
வெங்காயம் கண்ணாடி போல் ஆனதும் இஞ்சி பூண்டு விழுது, கறி வேப்பிலை, ரம்ப இலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் இந்த தாலிப்பை தனியாக எடுத்து வைக்கவும்.பின்பு இதே குக்கரில் சோறு சேர்க்கவும்.
- 4
ஊற வைத்த சிறு பைத்தம் பருப்பு, பூண்டு, வெங்காயம், வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கர் மூடி வெய்ட் வைத்து ஒரு 8 விசில் வரும் வரை மீடியம் ஃபேலிம்மில் வைத்து வேகவிடவும்.
- 5
ப்ரெஷர் நீங்கியதும் குக்கரைத் திறந்து மேலும் தண்ணீர் ஊற்றி, நன்றாக மசிக்கவும். பின்பு தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி மட்டும் கொதிக்க விடவும்.
- 6
பின்பு எடுத்து வைத்த தாலிப்பு ஊற்றி கிளறி விட்டு. பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றியப் பின் பரிமாறவும்.
- 7
1. வெயில் காலங்களில் கண்டிப்பாக அறுந்த வேண்டிய கஞ்சி இந்த வெள்ளை / தேங்காய் பால் கஞ்சி.
2. ருசியானது மட்டும் இல்லாமல் ஆரோக்கியமானதும் கூட இந்த வெள்ளை கஞ்சி.3. இது பாலூட்டும் தாய்மார்களுக்கு கண்டிப்பாக கொடுப்பார் கள்.
4.வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும்.பூண்டு வாய்வுத் தொல்லையை நீக்கும்.தேங்காய் பால் வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் பிடிப்பை ஏற்பட விடாமல் தடுக்கும்.
Similar Recipes
-
கர்கிடக கஞ்சி / ஔஷித கஞ்சி
கேரள ஆண்டின் கடைசி மாதம் கர்கிடக மாதம். (ஆடி மாதம்). இது பருவ மழை காலம் என்பதால் அங்கு இம்மாதத்தில் ஒரு விசேஷ கஞ்சி செய்யப்படுவது உண்டு . இது நோய் எதிர்ப்பு சக்தி அளித்து, ஜலதோஷம், விஷ காய்ச்சல், உடல் வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது. புத்துணர்வை அளித்து உடலில் தங்கிய நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சிவப்பரிசி மற்றும் மூலிகைகளால் செய்யப்படும் கஞ்சி இது. Subhashni Venkatesh -
-
-
-
-
தேங்காய் பால் புலவ்
சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த தேங்காய் பால் புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! Friend Meena Ramesh செய்த கிரேவி கூட சாப்பிட்டால் சுவை கூடும் #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன். Subhashni Venkatesh -
நோன்பு கஞ்சி
நோன்பு துறக்கும் சமயத்தில் இசுலாமியர்களின் உணவில் கட்டாயம் இடம்பெறுவது நோன்புக் கஞ்சிதான்!! காரணம், நாள் முழுவதும் ஏதும் உண்ணாமல் நோன்பிருப்பதால், இந்த கஞ்சி உடலுக்கு புத்துணர்வையும், அனைத்து விதமான சத்துக்களையும் அளிக்கும்.. எனவே எங்கள் இல்லத்தில், நோன்பு காலம் அல்லாது மற்ற நாட்களிலும் வாரம் ஒரு முறையேனும் காலையுணவில் இடம் பெற்றுவிடும் இது Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
-
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
சில்லிபூரி மசாலா
காலையில் செய்த பூரி மீதமாகி விட்டதா ? இனி கவலை வேண்டாம் அதை சுவையான இரவு உணவாக மாற்றலாம் வாருங்கள் செய்யலாம்.#i love cooking. லதா செந்தில் -
-
கேரளா ஸ்டைல் கடலை கறி
கேரளா ஸ்டைல் சமையலலில் தேங்காய்., தேங்காய். எண்ணை, தேங்காய். பால் மிகவும் முக்கியம். சின்ன கருப்பு சிகப்பு கடலை, ஸ்பெஷல் கரம் மசாலா பொடி, தக்காளி, வெங்காயம் சேர்ந்த கடலை கறி SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . ஆப்பம் கூட சேர்த்து ருசிக்க, #combo2 Lakshmi Sridharan Ph D -
ரோடு கடை சால்னா
பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சல்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #salna Lakshmi Sridharan Ph D -
-
-
தேங்காய் பால் சூப்
#sr பல காய்கறிகள், சத்துக்கள். சுவைகள் கலந்த சூப்;.வாட்டர் க்ரெஸ் காலிஃப்ளவர், கேபேஜ் குடும்பத்தை சேர்ந்தது; ஆனால் நீரில் வளர்வது. எலும்பை வலிப்படுத்தும்,தடுக்கும். ஆஸ்டியோபொரோஸிஸ் கேன்சர் தடுக்கும், கொலஸ்ட்ரால் குறைக்கும், இதயத்திக்கும் . விட்டமின்கள் A, C இன்5னும் பல நன்மைகள் உலோக சத்துக்கள். விட்டமின்கள். நோய் எதிர்க்கும் சக்தி நிறைந்த கம்ஃபர்ட் உணவு Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (5)