..ஆளு பொடிமாஸ்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#COLOURS3

காரக்குழம்பு , வத்த குழம்பு, மீன் குழம்பு, தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

..ஆளு பொடிமாஸ்

#COLOURS3

காரக்குழம்பு , வத்த குழம்பு, மீன் குழம்பு, தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 3பெரிய உருளைக்கிழங்கு
  2. 2 வர மிளகாய்
  3. 3 பெரிய வெங்காயம்
  4. சிறிதளவு கறிவேப்பிலை
  5. ஒரு ஸ்பூன் கடுகு
  6. ஒரு ஸ்பூன் உளுந்து
  7. சிறிதளவு கொத்தமல்லி
  8. 5 ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு அடுப்பில் ஒரு குக்கரில் 3 உருளைகிழங்கை சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.

  2. 2

    பின் குக்கரை மூடி 4 விசில் வைக்கவும் அடுப்பை அணைத்து விசில் அடங்கியதும் குக்கரை திறந்து உருளைக்கிழங்கை தோல் உரித்து வைக்கவும்.

  3. 3

    பின் கையால் பொடியாக பிசைந்து வைக்கவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.

  4. 4

    காய்ந்த உடன் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து, சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  5. 5

    அதில் 2 வர மிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  6. 6

    மசித்த உருளைக்கிழங்கை அதோடு சேர்த்து கிண்டி 5 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைத்து கொத்தமல்லியை தூவி இறக்கவும்.

  7. 7

    அதை ஒரு பிளேட்டில் பரிமாறவும். சுவையான ருசியான ஆளு பொடிமாஸ் ரெடி.🌼🌼🌼

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes