திருவாரூர் ஸ்பெஷல் கதம்ப சாம்பார்

Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664

திருவாரூர் ஸ்பெஷல் கதம்ப சாம்பார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப் துவரம் பருப்பு
  2. 2நறுக்கிய வெங்காயம்
  3. 2நறுக்கிய தக்காளி
  4. 200 கிராம் வெள்ளை பூசணிக்காய்
  5. 200 கிராம் மஞ்சள் பூசணிக்காய்
  6. 1சக்கரவள்ளி கிழங்கு
  7. 1 கேரட்
  8. 3 கத்தரிக்காய்
  9. 1 முருங்கைக்காய்
  10. 1/2 மேசைக் கரண்டி மஞ்சள்
  11. 2 வர மிளகாய்
  12. 2 தேக்கரண்டி மல்லித் தூள்
  13. 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  14. 1 மேஜைக்கரண்டி சாம்பார் தூள்
  15. 1/2 மேஜைக்கரண்டி பெருங்காயத் தூள்
  16. 1/2 கடுகு
  17. 1/2 மேஜைக்கரண்டி வெந்தயம்
  18. சிறிதளவுகறிவேப்பிலை
  19. சிறிதளவுகொத்தமல்லி
  20. தேவையான அளவுஉப்பு
  21. 3 குழி கரண்டி எண்ணெய்
  22. 1/2 தேக்கரண்டி சீரகம்
  23. 1/2 லெமன் சைஸ் புளி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் பருப்பை நன்கு சுத்தம் செய்த ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் பெருங்காயம், மஞ்சள் சிறிதளவு எண்ணெய் சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும், அடுத்ததாக புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும், பின் ஒரு கனமான கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து எண்ணை காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு கிளற வேண்டும்

  2. 2

    பின் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும், பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும், அடுத்ததாக எல்லா காய்கறிகளையும் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்

  3. 3

    பின், மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும், பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தட்டு போட்டு மூடி கொதிக்க விட வேண்டும்

  4. 4

    சாம்பார் நன்கு கொதித்ததும் புளியை நன்கு கரைத்துக் கொண்டு அதனுடன் சேர்த்து ஒரு கொதி வரும் வரை விட வேண்டும், பின் அடுப்பை அணைத்துவிட்டு கருவேப்பிலை கொத்தமல்லி மேலாக வேண்டும்

  5. 5

    சுவையான கதம்ப சாம்பார் தயார், இதை இட்லி தோசை மற்றும் வெள்ளை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

கமெண்ட் (3)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
என் கல்யாண சாம்பார் கதம்ப சாம்பார் போல

Similar Recipes