கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

#ed 2

சுவையான கோதுமை ரவா உப்புமா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.

கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)

#ed 2

சுவையான கோதுமை ரவா உப்புமா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணிநேரம்
4பேர்
  1. 1/2கிகோதுமை ரவை
  2. பல்லாரி வெங்காயம் 100 g
  3. தேவையான அளவுகாரத்துக்கு பச்சை மிளகாய்
  4. சிறிதளவுகருவேப்பிள்ளை
  5. 2தக்காளி-
  6. சிறிதளவுமல்லி இலை
  7. தேவையான அளவுதாளிக்க எண்ணெய்
  8. தாளிக்க கடுகு உளுந்து கடலைப்பருப்பு சிறிதளவு பெருங்காயத்தூள்
  9. தேவைக்கு உப்பு

சமையல் குறிப்புகள்

1/2 மணிநேரம்
  1. 1

    கடாயை அடுப்பில் வைத்து ரவையை வாணலியில் கொட்டி லேசாக வறுத்து எடுக்கவும்

  2. 2

    வறுத்த ரவையை வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு கடாயில் ஆயில் சேர்க்கவும் ஆயில் சூடானவுடன் கடுகு உளுந்து கடலைப்பருப்பு

  3. 3

    போட்டு தாளிக்கவும் அதனுடன் பொடியாக கட் செய்து வைத்துள்ள வெங்காயம் சேர்க்கவும்

  4. 4

    வெங்காயம் கண்ணாடி பதம் வரும் அளவுக்கு வதக்கிய பிறகு கட் செய்து வைத்துள்ள பச்சைமிளகாயை சேர்க்கவும்

  5. 5

    அதனுடன் கருவேப்பிலை சேர்க்கவும் நன்கு கிளறிவிட்டு கட் செய்து வைத்துள்ள இஞ்சியை சேர்க்கவும்

  6. 6

    உடன் மல்லி இலையையும் சேர்க்கவும் சேர்க்கவும் கிளறிவிட்டு தக்காளி சேர்க்கவும்

  7. 7

    நன்கு கிளறிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  8. 8

    தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்

  9. 9

    தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்க்கவும் சேர்த்து நன்கு கிளறி விடவும்

  10. 10

    சிறு தீயில் ஐந்து நிமிடம் வேகவிடவும் இப்போது சுவையான கோதுமை ரவா உப்புமா தயார் சாப்பிடலாம் வாங்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Saheelajaleel Abdul Jaleel
அன்று

Similar Recipes