குளோப் ஜமுன்(gulab jamun recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

குளோப் ஜமுன்(gulab jamun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு பாக்கெட்என்டிஆர் குளோப் ஜாமுன் பவுடர்
  2. ஒரு டேபிள்ஸ்பூன் பால்
  3. 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர்
  4. ஒரு டீஸ்பூன்நெய்
  5. தேவையானபொரிப்பதற்கு எண்ணெய்
  6. 2 டம்ளர்சர்க்கரை
  7. ஒரு டீஸ்பூன்ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் என்டிஆர் குலோப்ஜான் பவுடரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு மாவை பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிசைந்த மாவின் சிறிது எண்ணெய் தடவி வைக்கவும். பத்து நிமிடம் கூறியபின் சிறு சிறு உருண்டைகளாக கைகளில் எண்ணெய் தடவி உருட்டி கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் ஜாமூன் உருண்டைகளை பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்

  4. 4

    மற்றொரு அடுப்பில் அகலமான பாத்திரத்தில் 2 டம்ளர் சர்க்கரை சேர்த்து 3டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்கவிடவும் இதனுடன் ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பாகு நன்கு ஆறியபின் பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

  6. 6

    சுவையான குலோப் ஜாமூன் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes