இட்லி (Soft healthy idli recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

எப்போதும் போல் இட்லிக்கு அரிசி ஊற வைத்தேன்.. வீட்டில் எல்லா சிறு தானிய வகைகளும் தீர்ந்த பிறகு ஒரு டம்ளர் சாமை அரிசி மிச்சமிருந்தது. அரிசிக்கு ஊறவைத்த பிறகு சாமை ஒரு டம்ளர் சேர்த்து ஊற வைத்தேன். எப்போதும் சேர்க்கும உளுந்து அளவுடன் ஒரு கைப்பிடி அளவு ஒரு டம்ளர் சாமைக்கும் சேர்த்து ஊற வைத்தேன். இட்லி மாவை கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொண்டேன். இட்லி மாவு புளித்த பிறகு காலையில் இட்லி ஊற்றினேன். ட மிகவும் மிருதுவாகவும் அதேசமயம் நாம் தினமும் செய்யும் இட்லியை விட டேஸ்ட் வித்தியாசமாகவும் இருந்தது. இப்படி கூட வேறு சிறுதானியங்களை சேர்த்து செய்யலாம்..முழுதும் சிறுதானியங்களில் இட்லி செய்தால் பிடிக்காத குழந்தைகள் ,வீட்டில் பெரியவர் சிலரும் இருப்பர் அவர்களுக்கு இது போல் சேர்த்து செய்து கொடுக்கலாம். வித்தியாசம் தெரியாது சுவையும் நன்றாக இருப்பதால் விரும்பி சாப்பிடுவர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6+8+15 mns
  1. 1.5படி இட்லி அரிசி சுமார் 6 பெரிய டம்ளர்
  2. 1பெரிய டம்ளர் சாமை அரிசி அல்லது வேறு சிறுதானியம்
  3. 230GM's உளுத்தம் பருப்பு.அல்லது 1.5டம்ளர் உளுத்தம் பருப்பு
  4. 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம்
  5. உப்பு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

6+8+15 mns
  1. 1

    இட்லி அரிசியையும் சாமை அரிசியையும் தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.ஆறு மணி நேரத்திலிருந்து 8 மணி நேரம் வரை ஊற வைக்கலாம். உளுத்தம்பருப்பை அரைப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு கழுவி வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    முதலில் உளுந்தை கிரைண்டரில் பொங்க ஆட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு இட்லி அரிசி கிரைண்டரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். வழிப்பதர்க்கு 5 நிமிடம் முன்பே உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாவை வழித்து உளுந்து வழித்த பாத்திரத்தில் சேர்த்து கிரைண்டரை கழுவி தேவையான அளவு இந்த தண்ணீர் சேர்த்து இட்லி ஊற்றும் பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு மாவை வெளியில் வைத்து புளிக்க வைத்து கொள்ளவும். எட்டிலிருந்து பத்து மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.

  3. 3

    மீதி மாவை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு தேவையான போது வெளியில் எடுத்து வைத்து புளிக்க வைத்து மீண்டும் இட்லி அல்லது தோசை ஊற்றி கொள்ளலாம்.மறுநாள் காலை இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இட்லி மாவை கரண்டி கொண்டு நன்றாக ஒருமுறை கலந்து இட்லி தட்டில் அளவாக ஊற்றி 7 நிமிடம் வரை வேக விடவும். இட்லி வெந்து விட்டதா என்று பார்த்துவிட்டு இட்லியை ஹாட் பேக்கில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    இந்த இட்லிக்கு ஏதாவது ஒரு புளி சட்னி கிரீன் சட்னி மிளகாய் சட்னி சாம்பார் எது வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். ஆரோக்கியமும் கிடைக்கும் அதே சமயம் சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த இட்லி சாப்பிடுவார்கள். நான் இன்று இந்த இட்லிக்கு பாசி பருப்பு தக்காளி சாம்பார் செய்தேன். சூடான இட்லி மேல் சாம்பார் ஊற்றி நெய் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. நான் மேற்கொண்ட இந்த முயற்சி நன்றாக அமைந்தது. பகலில் பஞ்சு போல் இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes