சத்தான சுவையான வெஜிடபிள் சூப்(veg soup recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

சிம்பிளா செய்யும் சூப் சத்துமிக்கது.
#wt1

சத்தான சுவையான வெஜிடபிள் சூப்(veg soup recipe in tamil)

சிம்பிளா செய்யும் சூப் சத்துமிக்கது.
#wt1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1கேரட்
  2. 5பீன்ஸ்
  3. 2 தட்டை மக்காசோளம்
  4. 2இலை முட்டைக்கோஸ்
  5. 100 கிராம் காலிஃப்ளவர்
  6. 20 பச்சை பட்டாணி
  7. 2டீஸ்பூன் மிளகுத்தூள்
  8. 4பல் பூண்டு
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    கேரட் பீன்ஸ் முட்டைக்கோஸ் காலிஃப்ளவர் இவற்றை நீளவாக்கில் அல்லது பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதனுடன் பச்சை பட்டாணி ஒரு தட்டை மக்காச்சோளத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.ஒரு தட்டை மக்காச்சோளத்தை பொடியாக உதிர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய நான்கு பல் பூண்டு போட்டு நன்றாக வதக்கவும். பூண்டின் பச்சை வாசனை போனபின் வெஜிடபிள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும்.

  3. 3

    நன்றாக வதங்கியவுடன் உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேக விடவும். வெஜிடபிள் வெந்தவுடன் மேலும் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் அரைத்து வைத்த மக்காச் சோளத்தையும் ஊற்றி உப்பு சரிபார்த்து கொதிக்க விடவும்..

  4. 4

    சூப் நன்றாக கொதித்தவுடன் உப்பு சரிபார்த்து இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.இப்பொழுது சூப் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rithu Home
Rithu Home @rithuhomemohana
அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

Similar Recipes