மட்டன் வெஜிடபிள் குழம்பு.(mutton veg curry recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

மட்டன் வெஜிடபிள் குழம்பு.(mutton veg curry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி
4பேர்
  1. அரை கிலோமட்டன்
  2. கால் கிலோகத்தரிக்காய்
  3. 100 கிராம்உருளைக்கிழங்கு
  4. 200 கிராம்தக்காளி
  5. 4 எண்ணிக்கைபச்சை மிளகாய்-
  6. சிறிதளவுகறிவேப்பிலை
  7. 2பல்லாரி வெங்காயம்
  8. தேவையானஅளவு உப்பு
  9. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  10. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  11. இரண்டு ஸ்பூன்மிளகாய்த்தூள்
  12. இரண்டு ஸ்பூன்மல்லித்தூள்
  13. இரண்டு ஸ்பூன்கரம் மசாலா
  14. 5 ஸ்பூன்தேங்காய் அரைத்த விழுது
  15. சிறிதளவுகரைத்து வைத்துள்ள புளி
  16. தேவையானஅளவுஆயில்
  17. தாளிக்க சிறிதளவு மிளகு சீரகம்

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    கடாயில் ஆயில் சேர்க்கவும் 5 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு மிளகு சீரகம் சேர்க்கவும்

  2. 2

    சீரகம் மிளகு பொரிந்தவுடன் பல்லாரி வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்க்கவும் நீளவாக்கில் கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்

  3. 3

    மஞ்சள் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து வைத்துள்ள மட்டனை சேர்க்கவும் உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்

  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும் நன்கு கிளறிய பிறகு கட் செய்து வைத்துள்ள தக்காளி மல்லி இலை

  5. 5

    சேர்க்கவும் பிறகு நமக்கு தேவையான காய்கறிகள் சேர்க்கலாம் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கட் செய்து வைத்துள்ளதை சேர்க்கவும்

  6. 6

    நன்கு கிளறி விட்டு அரைக் கப் தயிர் சேர்க்கவும்

  7. 7

    தயிர் சேர்த்து பிறகு நன்கு கலந்துவிடவும் உடன் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள்

  8. 8

    மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும் நன்கு கிளறி விடவும்

  9. 9

    காய் வேக தேவையான தண்ணீர் சேர்க்கவும் நன்கு கிளறி விட்டு மூடி வைத்து 10 நிமிடம் சிறு தீயில் வேக விடவும்

  10. 10

    காய்கறிகள் நன்கு வெந்தபிறகு ஒரு எலுமிச்சம் பழத்தில் பாதி அளவுள்ள புளியை கரைத்து அந்த நீரை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும் பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்

  11. 11

    இப்போது எல்லாமாக சேர்த்து மூடி வைத்து ஒரு நிமிடம் கொதிக்கவைத்து எடுத்துவைக்கவும் மல்லி இலை தூவி விடவும் இப்போது சுவையான மட்டன் வெஜிடபிள் குழம்பு தயார் சாப்பிடலாம் வாங்க...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Saheelajaleel Abdul Jaleel
அன்று

Similar Recipes