வெஜிடபிள் குருமா(veg kurma recipe in tamil)

S.mahima shankar
S.mahima shankar @mahiabhi

வெஜிடபிள் குருமா(veg kurma recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேர்
  1. 200 கிராம்உருளைக்கிழங்கு
  2. 100 கிராம்கேரட்
  3. 100 கிராம்பீன்ஸ்
  4. ஒன்றுபெரிய வெங்காயம்
  5. 4பச்சை மிளகாய்-
  6. கால் ஸ்பூன்மஞ்சள் தூள்
  7. ஒரு துண்டுபட்டை ,
  8. 2கிராம்பு-,
  9. கால் ஸ்பூன்சோம்பு
  10. கால் ஸ்பூன்சீரகம் ,
  11. ஒரு துண்டுஇஞ்சி ,
  12. 5 பல் பூண்டு
  13. 1தக்காளி-
  14. தேவைக்கேற்பஉப்பு
  15. கால் கப்தேங்காய் ,
  16. 4முந்திரி பருப்பு
  17. தேவைக்கேற்பஎண்ணெய்
  18. மல்லி இலை,
  19. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் ஆகிய மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும், வெங்காயத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

  3. 3

    தேங்காய் முந்திரிப் பருப்பை விழுதாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    தாளிப்பதற்கு பட்டை கிராம்பு சோம்பு சீரகம் எடுத்துக்கொள் எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு சோம்பு சீரகம் போட்டு பொரிந்ததும்

  6. 6

    பிறகு நறுக்கிய வெங்காயம் நறுக்கிய காய்கறிகள் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை சேர்க்கவும்

  7. 7

    இஞ்சி பூண்டை தட்டி வைத்து அதையும் சேர்க்கவும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்

  8. 8

    இதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்

  9. 9

    தேவைக்கேற்ப தண்ணீர் உப்பு சேர்த்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்

  10. 10

    சுவையான வெஜிடபிள் குருமா சப்பாத்தி பரோட்டா அத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
S.mahima shankar
அன்று

Similar Recipes