முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)

Sowmya
Sowmya @Sowmya_Dharshini

முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 முருங்கைக்காய்
  2. 1/2 cup துவரம் பருப்பு
  3. 15 சின்ன வெங்காயம்
  4. 3 தக்காளி
  5. 1 தேக்கரண்டி சீரகம்
  6. 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  7. 1 தேக்கரண்டி சாம்பார் தூள்
  8. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. 1 தேக்கரண்டி விளக்கெண்ணை
  10. 10 கறிவேப்பிலை
  11. கொஞ்சம்கொத்தமல்லி இலைகள்
  12. தாளிப்பதற்கு
  13. 4 சின்ன வெங்காயம்
  14. 3 பல் பூண்டு
  15. கடுகு
  16. சீரகம்
  17. கறிவேப்பிலை
  18. 3 மேஜை கரண்டி தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரில் துவரம் பருப்பு வெங்காயம் பூண்டு நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள் சாம்பார் தூள் கறிவேப்பிலை சீரகம் தேவையான அளவு தண்ணீர் உப்பு விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் குக்கரை திறந்து மசித்துக் கொள்ளவும் இதில் வெட்டி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வேக வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக தாளித்து பருப்பில் சேர்த்து கொள்ளவும் கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sowmya
Sowmya @Sowmya_Dharshini
அன்று

Similar Recipes