தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம்.

தூதுவளை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)

சளி இருமலை போக்கக்கூடிய பாட்டி வைத்திய ரசம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 15தூதுவளை இலை
  2. 2 தேக்கரண்டி மிளகு
  3. 2 தேக்கரண்டி சீரகம்
  4. 6 பல் பூண்டு
  5. 3 பச்சை மிளகாய்
  6. 1 மேஜைக்கரண்டி எண்ணெய்
  7. கடுகு
  8. கருவேப்பிலை
  9. கோலிகுண்டு அளவு புலி
  10. 1 தக்காளி
  11. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  12. தேவையானஅளவு உப்பு
  13. கொத்தமல்லி இலை
  14. 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தூதுவளை இலையை கத்தரிக்கோல் கொண்டு முள் குத்தாதவாறு வெட்டிக் கொள்ளவும். அதில் பின் பக்கம் இருக்கும் முல்லை கிள்ளி எடுக்கவும். நன்றாக அலசி வைக்கவும். மிக்ஸியில் மிளகு, சீரகம் பூண்டு பச்சை மிளகாய் 4 கருவேப்பிலை கூடவே தூதுவளை இலை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

  2. 2

    புலியை தண்ணீரில் ஊற வைக்கவும் இதில் தக்காளி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கரைத்து கரைசல் தயாரிக்கவும்.

  3. 3

    அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். அதன்பின் அரைத்த மிளகு சீரகம் மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி கரைசல் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  4. 4

    நுரை கட்டி வந்த பின் அடுப்பை அணைக்கவும். மருத்துவ குணம் நிறைந்த தூதுவளை ரசம் சாப்பிட சளி குணமாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Top Search in

Similar Recipes