கடலைக் கறி மசாலா(kadalai curry recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#FC
@cook_19872338
நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து ஆப்பமும் கடலைக் கறியும் செய்துள்ளோம்

கடலைக் கறி மசாலா(kadalai curry recipe in tamil)

#FC
@cook_19872338
நானும் தோழி லட்சுமி ஸ்ரீதரனும் சேர்ந்து ஆப்பமும் கடலைக் கறியும் செய்துள்ளோம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோ கருப்பு சுண்டல்
  2. 2நறுக்கிய பெரிய வெங்காயம்
  3. 1நறுக்கிய தக்காளி
  4. 10 பல் பூண்டு
  5. தேவையான அளவுஉப்பு
  6. 1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1டீ ஸ்பூன் மிளகாய்த் தூள்
  8. 1டீ ஸ்பூன் மல்லித்தூள்
  9. 1/2டீ ஸ்பூன் கரம் மசாலா
  10. 2 காஷ்மீரி மிளகாய்
  11. தாளிக்க
  12. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  13. 1 பட்டை
  14. 2 கிராம்பு
  15. 1பிரஞ்சு இலை
  16. 1/4டீ ஸ்பூன் சோம்பு
  17. 1/4டீ ஸ்பூன் சீரகம்
  18. கொத்தமல்லி தழை தேவையான அளவு
  19. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சுண்டல் கடலையை 6 மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு ஊறியதும் அதை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு வெந்ததும் அதில் 3 டேபிள் ஸ்பூன் சுண்டலை எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், பூண்டு, முந்திரி, தக்காளி, காஷ்மீரி மிளகாய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு வதங்கியதும் அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, பிரஞ்சு இலை, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்

  6. 6

    பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் அரைத்த வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்

  7. 7

    பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்

  8. 8

    பிறகு வதங்கியதும் அதில் வேகவைத்த சுண்டலை சேர்த்து வதக்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு, அரைத்த சுண்டல் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்

  9. 9

    பிறகு அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  10. 10

    இப்பொழுது சுவையான ஆரோக்கியமான கடலைக் கறி மசாலா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes