கட்டோரி சென்னா சாட்(katori channa chat recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

கட்டோரி சென்னா சாட்(katori channa chat recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 1/2 கப் மைதா மாவு
  2. 1 1/2 கப் கான்பிளவர்
  3. 1/4 கிலோ வேகவைத்த சுண்டல்
  4. 3/4 கப் தண்ணீர்
  5. 1 பெரிய வெங்காயம்
  6. 1 தக்காளி
  7. தேவையானஅளவு உப்பு
  8. 50 கிராம் முட்டைக்கோஸ்
  9. 50 கிராம் மிச்சர்
  10. 50 கிராம் கேரட்
  11. சிறிதளவுகொத்தமல்லி
  12. 1/2 ஸ்பூன் சாட் மசாலா
  13. 1 ஸ்பூன் சீரகம்
  14. 1/2 லிட்டர் எண்ணெய்
  15. கிரீன் சட்னி
  16. 4 பச்சை மிளகாய்
  17. 1 துண்டு இஞ்சி
  18. சிறிதளவுகொத்தமல்லி
  19. 1 துண்டு புளி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, கான்பிளவர், உப்பு, 2ஸ்பூன் பட்டர் சீரகம் சேர்த்து கலக்கவும் பிறகு அதில் தண்ணீர் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்

  2. 2

    பிறகு மிக்ஸியில் 4 பச்சை ‌மிளகாய்,1 துண்டு இஞ்சி,1 கைப்பிடி கொத்தமல்லி,புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்

  3. 3

    பிறகு ஊறிய மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து ஒரு கிண்ணத்தின் பின்பகுதியில் வைத்த அழுத்தி வைக்கவும்

  4. 4

    பிறகு அழுத்தி வைத்துள்ள மாவை எண்ணெயில் போடவும் பிறகு பொரிந்ததும் கிண்ணத்தை தனியாக எடுக்கவும் பிறகு கட்டோரி இரண்டு பக்கமும் பொரிந்ததும் எடுக்கவும்

  5. 5

    பிறகு ஒரு தட்டில் பொறித்த கட்டோரியை வைக்கவும்

  6. 6

    பிறகு அந்த கட்டோரில் வேகவைத்த சுண்டல், துருவிய கேரட், நறுக்கிய முட்டைக்கோஸ், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, சாட் மசாலாவை மேலே தூவி விடவும், கிரீன் சட்னி சேர்க்கவும்

  7. 7

    பிறகு மீண்டும் அதில் கேரட், முட்டைக்கோஸ், தக்காளி, சாட் மசாலா,மிச்சர், கிரீன் சட்னி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்

  8. 8

    இப்பொழுது சுவையான கட்டோரி சென்னா சாட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes