வேர்க்கடலை புளிப்பு சாட் (Verkadalai pulippu chat recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

வேர்க்கடலை புளிப்பு சாட் (Verkadalai pulippu chat recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 1கப் பச்சை வேர்க்கடலை
  2. 1துண்டு மாங்காய்
  3. 1பெரிய வெங்காயம்
  4. 1துண்டு கேரட்
  5. 1/2 தக்காளி
  6. 1துண்டு வெள்ளரிக்காய்
  7. சிறியஅளவு முட்டைக்கோஸ்
  8. 1/2எலுமிச்சம்பழம்
  9. 6 இலை புதினா
  10. சிறிதளவுகொத்தமல்லி தழை
  11. உப்பு
  12. 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  13. 1/2 டீஸ்பூன் சாட் மசாலா

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    ஒரு கப் பச்சை வேர்க்கடலையை 1/2 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 5 விசில் வேகவிடவும். வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும்.

  2. 2

    வேர்க்கடலையில் மிளகாய்த்தூள் 1/2டீஸ்பூன் சேர்த்து வைக்கவும். மாங்காய் ஒரு துண்டு பொடியாக நறுக்கவும். பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும். முட்டைக்கோஸ் சிறிதளவு பொடியாக நறுக்கவும்.கேரட் ஒன்று துருவி வைக்கவும். வெள்ளரிக்காயை நறுக்கி வைக்கவும்.தக்காளி 1 பொடியாக நறுக்கவும். கொத்தமல்லித்தழை சிறிதளவு பொடியாக நறுக்கவும்.ஆறு புதினா இலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

  3. 3

    நறுக்கிய துருவிய காய்கறிகளை வேர்கடலையில் சேர்க்கவும். உப்பு,சாட் மசாலா சேர்த்து கலக்கி விடவும். 1/2எலுமிச்சை சாறு வேர்க்கடலையில் பிழிந்துவிடவும்.

  4. 4

    அனைத்தையும் சேர்த்து கலக்கி வைத்தால் வேர்க்கடலை புளிப்பு சாட் ரெடி. இதில் காரப்பொரி சேர்த்தும் வேர்க்கடலை புளிப்பு சாட் செய்யலாம். சுவை சூப்பர்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes