தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)

இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா
தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாக்கெட் தக்காளி சேவையை பிரித்து எடுத்துக் கொள்ளவும். அதை ஒருமுறை தண்ணீரில் நன்கு கழுவி விட்டு மீண்டும் உப்பு சேர்த்த தண்ணீரில் மிதக்கும் அளவுக்கு பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.அதேபோல் தக்காளி பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும். தாளிக்க தேவையான எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு இவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பத்து நிமிடம் உப்பு தண்ணீரில் ஊறிய சேவையை தண்ணீர் நன்றாக வடித்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இட்லி பானை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டை வைக்கவும். இட்லி தட்டில் துணி போட்டு அதன் மேல் தண்ணீர் வடித்த இந்த சேவையை பரவலாக வைக்கவும். இட்லி மூடி போட்டு மூடி பத்து நிமிடம் வரை வேக விடவும். வெந்த பிறகு தட்டை மட்டும் தனியாக எடுத்து கீழே வைத்து அதன் மேல் ஒரு ஸ்பூன் எண்ணெயை பரவலாக ஊற்றி விடவும். சிறிது ஆற வைத்து எடுத்தால் தனித்தனியாக சேவை உதிரியாக வரும்வரும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும் பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். இப்போது சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவை நன்கு வதங்கிய பிறகு ஆறிய சேவையை இதில் கொட்டி கட்டி இல்லாமல் நன்குகிளரி விடவும் பிறகு கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறி விடவும். சேவை நன்கு சூடு ஏறிய பிறகு அடுப்பை நிறுத்தி விடவும் சுவையான தக்காளி சேவை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)
ராகி சேவை செய்யும் போது அத்துடன் தக்காளி, பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது கலந்து செய்தால் காரசாரமான மசாலா வாசத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
-
Sweet & tomoto,coconut sevai (Sevai Recipe in Tamil)
#அம்மாஈரைந்து மாதம் ஊண் மறந்து, உறக்கமும் மறந்து, மடி சுமந்து, நம்மை ஈன்று, ரத்தத்தை பாலாக்கி, தேனாக தாலாட்டி, பசிக்கு சோறு ஊட்டி, அறிவுக்கு கல்வி புகட்டி, ஆசை என்றால் கொஞ்சி மகிழ்ந்து, தவறு செய்தால் கடிந்து திருத்தி, பின் அதற்காக மனம் வருந்தி, நல் மகனாய் விளங்க அறம் கற்பித்து, நம் பிறப்பிற்கு அர்த்தம் தந்தவள் அம்மா.நாம் நாடி கோவில் சென்று இரு கரம் கூப்பி தொழும் தெய்வத்தை விட மேலானவள். தமிழ் அகராதியில் பாசம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தேடி பார், அம்மா என்றே இருக்கும். அன்பால் ஆன அழகான தேவதை. கடவுள் தன்னை பள்ளாயிரம் கோடி பிரதிகள் எடுத்து பூமிக்கு அனுப்பிய அன்பு தெய்வம் அம்மா. அப்படி பட்ட அன்பு வடிவத்தை வாழ் நாள் முழுவதும் போற்றுவோம், தொழுவோம், பாதுகாப்போம். அன்னைகள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.. தெய்வமாகிய என் அம்மாவை இன்று மட்டுமல்ல என்றும் நான் வணங்குவேன். என் அம்மாவிற்கு பிடித்த சந்தவை(சேவை, அல்லது இடியாப்பம்) செய்துள்ளேன்.நானும் ஒரு அன்னை என்பதால் என் மகனுக்கு பிடித்த மில்க்ஷேக் செய்தேன். Meena Ramesh -
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
Tomato Idiyappam (Tomato idiyappam recipe in tamil)
#arusuvai4 நூடுல்ஸ் செய்து கொடுப்பதற்கு பதில் அரிசியில் செய்த இந்த தக்காளி இடியாப்பத்தை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்துவிடலாம். மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. BhuviKannan @ BK Vlogs -
-
-
*லெமன் அரிசி சேவை*
அரிசி சேவையில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். நான் அரிசி சேவையை வைத்து லெமன் சேவை செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
-
கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)
மிகவும் சத்தான கோதுமை சேவை செய்வது மிகவும் எளிது. இது வேலைக்கு செல்லும் எல்லோரும் மிகவும் குறைந்த நேரம் செலவழித்து செய்து சுவைக்க ஏற்ற சிற்றுண்டி.#photo Renukabala -
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
*அரிசி தயிர் சேவை*(tayir sevai recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சுலபமாகவும், ஆரோக்கியமாகவும்,லஞ்ச் செய்து தர நிறைய ரெசிபிக்கள் உள்ளது.நான் அரிசி சேவையை பயன்படுத்தி,* தயிர் சேவை* செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
#Vkசுவை மிக்க வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலி ஸ்பெஷல்.... வெண்டைக்காய், தக்கை பச்சடி இல்லாத கல்யாண விருந்தே இருக்க்காது அந்த அளவு இது முக்கியமான சைடு டிஷ்.... Nalini Shankar -
-
தக்காளி இட்லி உப்புமா (Tomato Idly Upma) (Thakkali idli upma recipe in tamil)
தக்காளி இட்லி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். இது நாட்டு தக்காளி சேர்த்து செய்ததால் ஒரு வித்யாசமாக, இலேசான தக்காளி புளிப்பு சுவையில் இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். Meena Ramesh -
ஸ்வீட் ராகி சேவை (Sweet Ragi Sevai Recipe in Tamil)
#masterclassபத்து நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய ஸ்வீட் ராகி சேவை மிகவும் ருசியானது சத்தானதும் என்பதால் அடிக்கடி நாம் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் பெருகும் நேரம் மிச்சமாகும். Santhi Chowthri -
டோமொடோ பாத்🍅 (Tomato bath recipe in tamil)
#karnatakaசாதம் வடித்த பிறகு தக்காளி சாதம் செய்ய வேண்டி வந்தால் இது போல் செய்யலாம். இப்படி செய்யலாம் என்று இந்த தக்காளி சாதம் செய்யும் முறையை பெங்களூரில் வசிக்கும் என்னுடைய தோழி எனக்கு சொல்லி கொடுத்தார்கள். ஸ்கூலுக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். தேவையான அளவு சாதம் இதற்கு பயன்படுத்தி கொண்டு மீதி சாதத்தில் தயிர் சாதம் அல்லது வேறு ஏதாவது சாதம் தயார் செய்து கொடுக்கலாம். ஆபீஸ் எடுத்து செல்லவும் ஏற்ற சாதம். Meena Ramesh -
தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)
#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது. Meena Ramesh -
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
ஆனியன், தக்காளி பாத்
#keerskitchenஅரிசி சேவையில் செய்த,"ஆனியன்,தக்காளி பாத்"இது. ஒரே கடாயில் செய்தது.வித்தியாசமானது. சுவையானது. Jegadhambal N -
-
-
கொத்தமல்லி மசாலா சேவை(kothamalli sevai recipe in tamil)
#LBஸ்கூலுக்கு செல்லும் குழந்தைகளின் உடல் ஆரோகியத்துக்கேத்த விதமாக வித்தியாசமான சுவையில் தான் தினம் தினம் செய்யவேண்டி இருக்கிறது .. அந்த வகையில் பச்சை கொத்தமல்லி உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது...... பிடித்து சாப்பிட்டார்கள்... Nalini Shankar -
தேங்காய் சேவை(coconut sevai recipe in tamil)
#crதேங்காய் சுவையுடன் சத்தும் கூடியது. இதில் உள்ள கொழுப்பு உடல் நலனுக்கு நல்லது Lakshmi Sridharan Ph D
More Recipes
- தலைப்பு : ப்ரைட் ரைஸ்(fried rice recipe in tamil)
- கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
- இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
- *செஷ்வான் ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்*(schezwan spicy fried rice recipe in tamil)
- தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
கமெண்ட்