Sweet & tomoto,coconut sevai (Sevai Recipe in Tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#அம்மா
ஈரைந்து மாதம் ஊண் மறந்து, உறக்கமும் மறந்து, மடி சுமந்து, நம்மை ஈன்று, ரத்தத்தை பாலாக்கி, தேனாக தாலாட்டி, பசிக்கு சோறு ஊட்டி, அறிவுக்கு கல்வி புகட்டி, ஆசை என்றால் கொஞ்சி மகிழ்ந்து, தவறு செய்தால் கடிந்து திருத்தி, பின் அதற்காக மனம் வருந்தி, நல் மகனாய் விளங்க அறம் கற்பித்து, நம் பிறப்பிற்கு அர்த்தம் தந்தவள் அம்மா.நாம் நாடி கோவில் சென்று இரு கரம் கூப்பி தொழும் தெய்வத்தை விட மேலானவள். தமிழ் அகராதியில் பாசம் என்ற சொல்லிற்கு அர்த்தம் தேடி பார், அம்மா என்றே இருக்கும். அன்பால் ஆன அழகான தேவதை. கடவுள் தன்னை பள்ளாயிரம் கோடி பிரதிகள் எடுத்து பூமிக்கு அனுப்பிய அன்பு தெய்வம் அம்மா. அப்படி பட்ட அன்பு வடிவத்தை வாழ் நாள் முழுவதும் போற்றுவோம், தொழுவோம், பாதுகாப்போம். அன்னைகள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.. தெய்வமாகிய என் அம்மாவை இன்று மட்டுமல்ல என்றும் நான் வணங்குவேன். என் அம்மாவிற்கு பிடித்த சந்தவை(சேவை, அல்லது இடியாப்பம்) செய்துள்ளேன்.நானும் ஒரு அன்னை என்பதால் என் மகனுக்கு பிடித்த மில்க்ஷேக் செய்தேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1கிலோ கடையில் வாங்கிய சேவை
  2. அரைக் கப் வெள்ளை எள்ளு
  3. 3/4 கப் வெல்லம்
  4. 4 ஏலக்காய்
  5. ஒரு கப் துருவிய தேங்காய்
  6. 2மீடியம் சைஸ் தக்காளி
  7. 1மீடியம் சைஸ் பெரிய வெங்காயம்
  8. தாளிக்க
  9. 3 ஸ்பூன் என்னை
  10. 4பச்சை மிளகாய்
  11. 1 ஸ்பூன் கடுகு
  12. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  13. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  14. தேவையான அளவுதூள் உப்பு
  15. சிறிதளவுகறிவேப்பிலை கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இனிப்பு சேவை. வெறும் வாணலியில் வெள்ளை எள்ளை நன்றாக சிவக்க வறுத்துக்கொள்ளவும்.முக்கால் கப் வெல்லத்தை நன்றாக பொடியாக்கி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் இரண்டு ஏலக்காயை நுனிக்கு போட்டு மெல்ல பாகாக காய்ச்சிக் கொள்ளவும். வெல்லம் நன்கு கரையும் வரை கொதித்தால் போதும். வறுத்த எள்ளு ஆறியவுடன் மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். இப்போது காய்ச்சிய வெல்லப்பாகில் இந்த எள்ளு தூளை நன்கு கலந்து கொள்ளவும். சேவையில் சிறிது எடுத்து எள்ளு வெல்ல பாகை சேர்த்து சாப்பிடவும். மிகவும் சுவையாக இருக்கும்.

  2. 2

    தக்காளி சேவை:இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயை அரிந்து வைத்துக்கொள்ளவும். இப்போது வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, தலா அரை ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். தூள் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

  3. 3

    இப்போது தக்காளி சேவை செய்ய தேவையான சேவையை எடுத்து சிறிது தண்ணீர் தெளித்து பிசறிக் கொள்ளவும். இப்படி செய்வதால் வரவரப்பு இருக்காது. சேவையை தாளித்த பொருட்களுடன் சேர்த்து நன்கு சூடேறும் வரை கிளறிக் கொள்ளவும். சுவையான தக்காளி சேவை தயார்.

  4. 4

    தேங்காய் சேவை: மீண்டும் ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, காய்ந்த உடன் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு அரிந்த பச்சை மிளகாய், கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து சிவந்தவுடன், துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.மீண்டும் தேவையான சேவையை எடுத்து தண்ணீர் தெளித்து பிசறி விட்டு, வறுத்த தேங்காய் துருவலுடன் சேர்த்து நன்கு சூடு வரும் வரை வறுக்கவும். தேங்காய் சேவை தயார்.

  5. 5

    இப்போது எள்ளு வெல்லப்பாகு இனிப்புசேவை மற்றும் தக்காளி, தேங்காய் சேவை தயார். என் அன்னைக்கு பிடித்த இடியாப்ப சேவைகள் இவைகள் எல்லாம். மேலும் நானும் ஒரு அன்னை. அதுவே என் மகனுக்கு பிடித்த மில்க்ஷேக் தயார் செய்தேன். இவைகள் அனைத்தும் எங்கள் வீட்டின் அன்னையர் தின ஸ்பெஷல் ரெசிப்பீஸ். (வீட்டிலே இடியாப்பம் நாமே செய்தும் கொள்ளலாம்)

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes