*மில்லட் லட்டு*(எனது 475 வது ரெசிபி)(millet laddu recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#MT
சிறுதானியங்கள் சிறுநீரைப் பெருக்கும். உடலில் உள்ள உப்பைக் கரைக்கும். கண் குறைபாடுகளை குறைக்க பெரிதும் உதவுகிறது.

*மில்லட் லட்டு*(எனது 475 வது ரெசிபி)(millet laddu recipe in tamil)

#MT
சிறுதானியங்கள் சிறுநீரைப் பெருக்கும். உடலில் உள்ள உப்பைக் கரைக்கும். கண் குறைபாடுகளை குறைக்க பெரிதும் உதவுகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 2 கப்மில்லட் மாவு (வீட்டில் செய்தது)
  2. 1-1/4 கப் நாட்டுச் சர்க்கரை (அவரவர் விருப்பம்)
  3. 2 டீ ஸ்பூன்ஏலக்காய்த்தூள்
  4. 20பாதியாக உடைத்த முந்திரி
  5. தேவையான அளவுஉருக்கிய நெய்
  6. ருசிக்குஉப்பு
  7. தேவைக்குதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பை மிதமான தீயில் வைத்து வெறும் கடாயில் மாவை போட்டு வாசனை வரும்வரை நன்கு வறுக்கவும்.

  3. 3

    வறுத்ததை பௌலில் போடவும்.

  4. 4

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.

  5. 5

    வறுத்த முந்திரி, ஏலத்தூளை பௌலில் மாவுடன் சேர்க்கவும்.

  6. 6

    கடாயில், நாட்டுச் சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து, நன்கு கொதித்து கரைந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.

  7. 7

    பிறகு வெல்லக் கரைசலை வடிகட்டவும்.

  8. 8

    மாவில் வெல்லக் கரைசலை சிறிது சிறிதாக ஊற்றவும்.

  9. 9

    அனைத்தையும் ஒன்று சேர கலந்து உருக்கிய நெய்யை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.

  10. 10

    பிறகு உருண்டைகளாக உருட்டி மேலே வறுத்த முந்திரியை வைத்து அலங்கரிக்கவும்.

  11. 11

    இப்போது, சத்தான, சுவையான, சுலபமான,*மில்லட் லட்டு*தயார். செய்து பார்த்து அசத்தி, சாப்பிட்டு, என்ஜாய் செய்யவும்.

  12. 12

    குறிப்பு:- இந்த லட்டில் சர்க்கரைக்கு பதில், நாட்டுச் சர்க்கரை சேர்ப்பதால், கூடுதல் சுவையும், ஆரோக்கியமும், கிடைக்கின்றது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes