பொட்டேட்டோ ஸ்பைரல்ஸ்
#மழைகால உணவுகள் ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவில் ஓமம், தேவையான அளவு உப்பு தூள், 4 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 2
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 3
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து துருவித் கொள்ளவும்.
- 4
துருவிய கிழங்குடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகு தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா, உப்பு தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக பிசையவும்.
- 5
கையில் எண்ணெய் தடவிக் கொண்டு பிசைந்த உருளைக்கிழங்கை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பின்னர் ஒரே நீளத்தில் சிலிண்டர் ஷேப்பில் உருட்டி வைக்கவும்.
- 6
3 டீஸ்பூன் மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல் செய்து வைக்கவும்.
- 7
மைதா மாவை மெல்லிய சப்பாத்தியாக திரட்டிக் கொண்டு அதை மெல்லிய ரிப்பன்களாக வெட்டிக் கொள்ளவும்.
- 8
அந்த ரிப்பன்களின் ஒரு பக்கம் மட்டும் மைதா பசையை தடவிக் கொள்ளவும்.
- 9
மைதா பசை தடவிய ரிப்பன்களை எல்லா உருளைக்கிழங்கு சிலிண்டர் மேல் சுற்றி தயார் செய்யவும்.
- 10
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த பொட்டேட்டோ ஸ்பைரல்ஸை பொரித்து எடுக்கவும்.
- 11
தக்காளி சாஸூடன் சாப்பிட சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சீஸ்சி உருளைக்கிழங்கு சாண்ட்விச்
#Sandwichஇது குழந்தைகளால் நேசித்த எளிய, சுவையான சாண்ட்விச். Sowmya Sundar -
-
-
-
-
-
-
-
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
ஆலு குல்ச்சா(aloo kulcha recipe in tamil)
இது எனது 200வது ரெசிபி என்பதை,மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.மைதாவில் செய்தாலும் மிக மிக சுவையான ரெசிபி.எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
டிராகன் பன்னீர் லாலிபாப்(Dragon paneer lollipop recipe in Tamil)
@TajsCookhouse , சூப்பர் ரெசிபி ஸிஸ் Azmathunnisa Y -
-
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
-
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்