ஜவ்வரிசி மாம்பழ ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கீர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

நார்மலான பாயசத்திற்கு பதில் புதுவகையான கீர் செய்யறது சாதாரண கீர் ஆனா பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள் வரை
6 பரிமாறுவது
  1. 1 கப் ஜவ்வரிசி
  2. 1/4 கப் மாம்பழ ப்யூரி
  3. 1 பாக்கெட் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிறிஸ்டல்
  4. 4 கப்பால்
  5. 2 கப்தண்ணீர்
  6. 1/2 கப்சர்க்கரை
  7. 1/2 டின்மில்க் மெயின்ட்
  8. சிறிதுரசகுல்லா

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள் வரை
  1. 1

    வாணலியில் 1_1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு கொதிக்கும் போது 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிறிஸ்டல் முழுவதும் போட்டு கொதிக்க விடவும்

  2. 2

    சற்று திக்காக வரும் போது இறக்கி மோல்டில் ஊற்றி செட் ஆகும் வரை (1/2 மணி நேரம்) விடவும்

  3. 3

    பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

  4. 4

    கொதிக்கும் போது ஜவ்வரிசி சேர்த்து நன்கு வேகவிடவும்

  5. 5

    ஜவ்வரிசி முக்கால் பாகம் வெந்ததும் கொதிக்க வைத்த பால் சேர்த்து நன்கு வேகவிடவும்

  6. 6

    ஜவ்வரிசி நன்கு வெந்ததும் சர்க்கரை மற்றும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்

  7. 7

    பின் அதில் பாதியை மட்டும் தனியா எடுத்து வைக்கவும்

  8. 8

    மீதமுள்ள ஜவ்வரிசி கீர் ல் மாம்பழ ப்யூரி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  9. 9

    இது இரண்டையும் அரை மணி நேரம் வரை குளிரவிடவும்

  10. 10

    பின் டம்ளரில் முதலில் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி ஐ போடவும்

  11. 11

    பின் ஜவ்வரிசி கீர் ஐ ஊற்றவும் பின் மீண்டும் சிறிது ஜெல்லி ஐ போடவும்

  12. 12

    பின் மாம்பழ ஜவ்வரிசி கீர் ஐ ஊற்றவும் அதன் மேல் மீண்டும் சிறிது ஜெல்லி ஐ போட்டு ரசகுல்லா வைத்து அலங்கரித்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes

More Recommended Recipes