ஸ்டப்டு(Stuffed) முருங்கைக்காய்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#முருங்கையுடன்சமையுங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1பெரிய முருங்கைக்காய் நறுக்கியது
  2. சிறிய கப்துருவிய தேங்காய்
  3. 100 கிராம்வறுத்த வேர்க்கடலை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்
  4. தேவையான அளவுஉப்பு
  5. ஒரு ஸ்பூன்கரம் மசாலா
  6. ஒரு ஸ்பூன்மிளகாய்த்தூள்
  7. எண்ணெய் 2 ஸ்பூன்தாளிக்க
  8. சிறிதளவுகடுகு
  9. சிறிதளவுஉளுந்து
  10. சிறிதளவுகருவேப்பிலை
  11. நறுக்கியது 1/4வெங்காயம்
  12. கால் ஸ்பூன்மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நறுக்கிய முருங்கை காயை நடுவில் லேசாக கீறிக்கொள்ளவும், ஆவியில் 2 நிமிடம் வேக விடவும்

  2. 2

    பொடித்த கடலையுடன் தேங்காய்த்துருவல் உப்பு சேர்க்கவும்

  3. 3

    மஞ்சள் தூள்,கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்க்கவும

  4. 4

    லேசாக வெந்த முருங்கைக் காயில் கடலை மசாலாவை ஸ்டப் செய்து நன்றாக மூடவும்

  5. 5

    மீதமுள்ள மசாலாவில் தண்ணீர் சிறிதளவு சேர்க்கவும்

  6. 6

    நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்கவும்

  7. 7

    வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  8. 8

    வெங்காயம் வதங்கியதும் மசால் வைத்துள்ள முருங்கைக்காய் ஒவ்வொன்றாக சேர்க்கவும்

  9. 9

    மசாலாத் தண்ணீரை ஊற்றி நன்றாக மசாலா வாசனை போகும் வரை வேகவிடவும்

  10. 10

    வெந்ததும் இறக்கி சூடாக சாப்பிடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes