Stuffed Bitter Gourd (Stuffed bitter gourd recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#arusuvai6 என் கணவருக்கு மிகவும் பிடித்த பாகற்காய் ரெசிபி.

Stuffed Bitter Gourd (Stuffed bitter gourd recipe in tamil)

#arusuvai6 என் கணவருக்கு மிகவும் பிடித்த பாகற்காய் ரெசிபி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2பாகற்காய்
  2. 1 டீஸ்பூன் தயிர்
  3. 1/2 கப் பொட்டுக்கடலை மாவு
  4. சிறிதுவெங்காயம்
  5. 1பெரிய உருளைக்கிழங்கு
  6. 1/2 கப் துருவிய கேரட்
  7. 4 துண்டு துருவிய பன்னீர்
  8. 1/2 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  9. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  11. 1டீஸ்பூன் கரம் மசாலா
  12. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  13. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாகற்காயை படத்தில் உள்ளது போல் வட்டமாக அரிந்து கொட்டையை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் சிறிது தயிர் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பதம் வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட் துருவிய பன்னீர் மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி அதில் தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்

  3. 3

    வதக்கிய மசாலா ஆறிய பின் அதனுடன் ஒரு கை பொட்டுக்கடலை மாவை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்

  5. 5

    செய்து வைத்த பூர்ணத்தை, வேகவைத்து எடுத்த பாகற்காயில் ஸ்டஃப் செய்து, கார்ன்ஃப்லர் மாவில் டிப் செய்து,ஒரு பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் அனைத்து பக்கமும் திருப்பி விட்டு பொரித்தெடுக்கவும்.

  6. 6

    மிகவும் சுவையான சிறிதும் கசப்பில்லாமல் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் இந்த முறையில் பாகற்காயை செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes