நெத்திலி மீன் வடை

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம்சுத்தம் செய்து முள் நீக்கிய நெத்திலி மீன்
  2. 1 கப்தேங்காய் துருவல்
  3. 3பச்சை மிளகாய் -
  4. 1 கப்சின்ன வெங்காயம் -
  5. 1 துண்டுஇஞ்சி -
  6. ஒரு கை நிறையமல்லி, புதினா, கறிவேப்பிலை நறுக்கியது
  7. 1/2 டீஸ்பூன்மஞ்சள் பொடி_
  8. 1 டீஸ்பூன்மிளகாய்த்தூள் -
  9. 2 டீஸ்பூன்சோம்பு -
  10. 2 டீஸ்பூன்உப்பு - தேவைக்கு
  11. தேவையான அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மேலே குறிப்பிட்ட அத்தனை பொருட்களையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸி ஜாரில் தருதருப்பாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு அதில் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  3. 3

    கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்திருக்கும் கலவையில் இருந்து ஒரு உருளை எடுத்து உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல் தட்டி எண்ணெயில் போடவும்.

  4. 4

    ஒருபக்கம் வெந்ததும் மறித்து போடவும்.

  5. 5

    மறு பக்கமும் வெந்து கோல்டன் ப்ரவுன் கலர் ஆகி வரும் போது எடுக்கவும்.

  6. 6

    மீதிக் கலவையை இது போல் உருளைகளாக்கி கையில் வைத்து தட்டி வடை போல் பொரித்து எடுக்கவும்.

  7. 7

    சுவையான நெத்திலி மீன் வடை ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes