தேவையான பொருட்கள்

  1. 1/4 படிஇட்லி அரிசி
  2. சிறிதுஉப்பு
  3. 10 சிறிய வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 4காய்ந்த மிளகாய்
  6. சிறிதுகறிவேப்பிலை
  7. சிறிதுமல்லி இழை
  8. 1/4 ஸ்பூன்கடுகு
  9. தாளிக்கஎண்ணெய்
  10. 1/4 ஸ்பூன்உளுந்து
  11. 1/4 ஸ்பூன்கடலை பருப்பு
  12. சிறிதுதேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை 2 மணிநேரம் ஊர வைத்து அரைக்கவும்.இட்லி மாவு போல் அரைக்கவும்.

  2. 2

    தேங்காய்யை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கடலை பருப்பு உளுந்து தாளித்ததும் இதனுடன் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் அரைத்த மாவு,உப்பு சேர்த்து வதக்கவும். மாவு நன்றாக வெந்ததும் தேங்காய், மல்லி இழை சேர்த்து ஆற விடவும்.

  5. 5

    இட்லி பானையில் தண்ணீர் விட்டு சூடு பண்ணவும்.

  6. 6

    ஆறிய மாவை கொழுக்கட்டையாக பிடித்து இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக விட்டு எடுத்து சட்னியுடன் பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes