பச்சை மக்காச்சோள கார பணியாரம் (Raw Maize spicy paniyaram recipe in tamil)

பச்சை மக்காச்சோள கார பணியாரம் (Raw Maize spicy paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை மக்காச்சோளத்தை பிரித்து எடுத்து, குறைந்தது பத்து மணி நேரம் ஊறவைக்கவும்.பின்னர் அத்துடன் அரிசியை கழுவி சேர்த்து ஐந்து மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு உளுந்து, வெந்தயம் சேர்த்து ஊற விடவும்.
- 2
பின்னர் கிரைண்டரில் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசைக்கு அரைப்பது போல் அரைத்து எடுக்கவும்.
- 3
அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். இந்த மாவில் புளிக்காமல் உடனே பணியாரம் செய்யலாம்.
- 4
தாளிக்க தேவையான வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 5
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொரிந்ததும்,வெங்காயம், தக்காளி,மல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
ஒரு பௌலில் வறுத்த வெங்காயம், தக்காளி கலவையை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 7
பின்னர் பணியாரம் செய்யும் தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், ஒவ்வொரு குழியிலும் எண்ணை சேர்த்து பாதி அளவு மாவை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும். நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எடுத்தால் பணியாரம் தயார்.
- 8
தயாரான பச்சை மக்காச்சோள பணியாரத்தை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து காரச்சட்னி செய்து, அத்துடன் வைத்து சுவைக்கவும்.
- 9
இந்த பச்சை மக்காச்சோள கார பணியாரம் மிகவும் சுவையாக இருக்கும்.மிகவும் சத்தானது.
- 10
பச்சை மக்காச்சோளம் கிராமங்களில் அதிகமாக கிடைக்கும். அங்கு அதிகம் இது போன்று பணியாரம், தோசை போன்ற உணவுகளுக்கு பயன்படுத்துவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)
எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
செட்டி நாட்டு கார குழிப்பணியாரம் (kuzhippaniyaaram recipe in tamil)
செட்டி நாட்டு பாரம்பரிய கார குழிப்பணியாரம் செய்வது மிகவும் சுலபம்.பச்சரிசி,இட்லி அரிசி இரண்டும் சேர்த்து செய்வதால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#ed1 Renukabala -
-
ஸ்பைசி சூப்பர் சாஃப்ட் கார பணியாரம்(kara paniyaram recipe in tamil)
#wt2இது deconstructed செட்டிநாட் கார பணியாரம். செட்டிநாட் செய்முறையில் குழியில் எண்ணை நிறப்பி பணியாரம் பொரிக்கிறார்கள். நான் எண்ணையில் பொறிக்க விரும்புவதில்லை“A snack to die for”. எண்ணையில் பொரிக்காமல் சத்து சுவை நிறைந்த கார பணியாரம் வெங்காயம், காய்கறிகள், கறிவேப்பிலை , ஸ்பைஸ் பல சேர்ந்த பணியாரம் Lakshmi Sridharan Ph D -
கார பணியாரம் - (kaara paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.Shanmuga Priya
-
வெந்தய கார பணியாரம் (Vendhaya kaara paniyaram recipe in tamil)
#nutrition3 நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் மிக முக்கியமானது வெந்தயம் ஆகும் இந்த வெந்தயத்தை மட்டும் சேர்த்து சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமாக பணியாரம் செய்வார்கள் .எனது தோழியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி இது.வெந்தயத்தை சேர்த்து செய்தால் கசக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் மிகவும் வாசனையாக அர்த்தமாக இருக்கும் இதை அனைவரும் செய்து சாப்பிடுங்கள். Santhi Chowthri -
கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.shanmuga priya Shakthi
-
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
-
-
-
-
ஸ்டப்புடு இட்லி (Stuffed idli Recipe in Tamil)
இட்லியில் புழுங்கல் அரிசி, உளுந்து, கடலை பருப்பு சேர்த்தப்பட்டுள்ளது.இதில் வைட்டமின் B, வைட்டமின் C உள்ளது. #book #nutrient 2 Renukabala -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
-
-
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
-
தயிர் தக்காளி கார தாளிப்பு (Curd tomato spicyseasoning) (Thayir thakkaali thaalippu recipe in tamil)
தயிர் தக்காளி தாளிப்பு என்பது சுவையான ஒரு கார சட்னி போல் தான். இதை சாதம், இட்லி, தோசையுடன் சுவைக்கலாம். தினமும் சட்னி சாப்பிட்டு வெறுத்துப்போகும் போது இது போல் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள் ளேன்.#Cookwithmilk Renukabala -
-
-
-
சோளம் பச்சை மாங்காய் பணியாரம் (Solam pachai maankaai paniyaram recipe in tamil)
#arusuvai 3 Renukabala -
மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
சிரி தானிய வகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்தது மக்காசோளம். அந்த ரவையை வைத்து மிகவும் சுவையான உப்புமா செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கவும். Renukabala
More Recipes
கமெண்ட்